மூல நோய்க்கு மருந்து :
தீரும் நோய்கள் : மூலக்கிராணி ( உஷ்ணக் கழிச்சல் ) மூலத்திலிருந்து இரத்தம் வருதல் போன்ற மூல நோய்கள் குணமாகும்.
தேவையான பொருட்கள் :
சுக்கு 10 கிராம்
மிளகு 10 கிராம்
திப்பிலி 10 கிராம்
ஓமம் 10 கிராம்
மஞ்சள் 10 கிராம்
சாதிக்காய் 10 கிராம்
கிராம்பு 10 கிராம்
வெள்ளுள்ளி 10 கிராம்
அபின் 10 கிராம்
செய்முறை :
மேற்கண்ட சரக்குகளை ( முறையாக ) தனித்தனியாக சுத்தி செய்து கொள்ளவும். 1லிருந்து 7 வரையுள்ள சரக்குகளை தனித்தனியாகத் தூள் செய்து கொண்டு ஒன்றாகக் கலந்து கொள்ளவும். வெள்ளுள்ளியை தோல் நீக்கி கொஞ்சம் சூரணத்துடன் சேர்த்திடித்து ஒன்றாகக் கலந்து விடவும். அபினியை சிறிது நீரில் கரைத்து வடிகட்டிக் கொண்டு, சூரணத்துடன் சேர்த்து நன்றாக உறவாகும்படி கலந்து கொள்ளவும். ஈரப்பதம் இருப்பின் உலர்த்தியெடுத்து பத்திரப்படுத்தவும்.
உபயோகம் :
பெரியவர்களுக்கு 3 குன்றியளவும், குழந்தைகளுக்கு ஒரு குன்றியளவும் காலை மாலை தேனில் குழைத்து கொடுக்கவும். 3 நாள் அல்லது 5 நாட்கள் தரலாம். மேற்சொன்ன நோய்கள் குணமாவதோடு பலவகையாக பேதியாகும் கிராணி நோய்களுக்கும் தரலாம்.