முகவாத ஜன்னிக்கும், பக்கவாதத்திற்கும்
தீரும் நோய்கள் : முகவாதம், பக்கவாதம் முதலான எல்லா வகையான வாதநோய்களும் குணமாவதோடு, இரத்த விருத்தியாகி, நரம்புகளும் ஊட்டம் பெற்று பலமும் உண்டாகும். நோய்கள் அறவே தீரும்.
தேவையான பொருட்கள்
கொடிக்கள்ளிச்சாறு 2 தேக்கரண்டியளவு
அயச்செந்தூரம் 20 கிராம்
பூநாகச் செந்தூரம் 20 கிராம்
லிங்க செந்தூரம் 10 கிராம்
செய்முறை :
முதலில் கொடிக்கள்ளியை இடித்துச் சாறு பிழிந்து கொள்ளவும். பிறகு 2, 3, 4 ஆகிய செந்தூரங்களை ஒன்றாகக் கலந்து அரைத்து புட்டியில் பதனப்படுத்தவும்.
உபயோகம் :
முதல் நாள் 2 தேக்கரண்டியளவு கொடிக்கள்ளிச் சாற்றை காலையில் உள்ளுக்குச் சாப்பிடக் கொடுக்கவும். பேதியாகும். இடையில் ஒரு நாள் விட்டு மறுநாள் ஒரு தேக்கரண்டியளவு மேற்படிச் சாற்றை உள்ளுக்குக் கொடுக்கவும். பிறகு இடையில் ஒரு நாள் விட்டு மறுநாள் ஒரு தேக்கரண்டியளவு மேற்படிச் சாற்றை உள்ளுக்குக் கொடுக்கவும். 3 நாட்கள் போதுமானது. இதைச் சாப்பிட்ட பிறகு மேற்சொன்ன நோய்கள் பாதி அளவு குறைந்து விடும். அதன் பிறகு கலந்து வைத்துள்ள செந்தூரத்தில் ஒரு குன்றி அளவு காலை மாலை தேனில் கொடுத்துக் கொண்டு வரவும். 20 நாட்கள் வரை சாப்பிட வேண்டும். மேலும் அவசியம் இருப்பின், நோய் தீரும் வரை கொடுக்கவும். மேற்சொன்ன நோய்கள் தீர்ந்து உடல் ஆரோக்கியம் அடையும்.
பத்தியம் :
மருந்து சாப்பிடும் போது புளி, கடுகு, நல்லெண்ணெய், மாமிச மச்ச வகைகள், வாயு பதார்த்தங்கள் அறவே கூடாது. நெய், சீரகம், வெங்காயம் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.