பிக்பாஸ்-3 நிகழ்ச்சியில் காமெடி நடிகை ஜாங்கிரி மதுமிதாவுக்கும் விருந்தாளியாக மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த வனிதாவிற்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, உள் இருந்த 8 பேரிடமும் சண்டை நடந்து தமிழ் பெண் தமிழ் பெண் என ஓவர் பில்டப் விட்டு கத்தியால் கையைக் கிழித்து டிராமா போட்ட நிலையில் மதுமிதா வெளியேற்றப்பட்டார்.
வெளியேறிய நான்கு வாரங்களுக்குள் பல டிராமா போட்டு பேமெண்ட் வாங்கிய அடுத்த நாளே, பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல் மீது போலீசில் புகார் கொடுத்துவிட்டு, இணையதளங்களுக்கு பேட்டி கொடுக்க ஆரம்பித்துள்ளார்.
அவர் கொடுத்துவரும் பேட்டியில் தமிழ் பெண், தமிழ் பெண் என வார்த்தைக்கு வார்த்தை புலம்பி வருகிறார். கமல் சார் நியூஸ் வாசிக்க சொன்னப்போ, அப்போ அபிராமி பெருமையா இந்த கொழந்த முகேன்க்கும் பொறந்ததுன்னு சொன்னாங்க, அப்போ என் தமிழ் மக்கள் பார்க்கிறாங்கன்னு அப்போ நான் பேசினேன். அதில் அப்போ, பாருங்க இதை நான் சொல்லும்போது அத்தனை பேரும் சுத்தி சுத்தி என்னை கேள்வி கேட்டாங்க, சாக்க்ஷி என்கிட்ட கேட்குது, தமிழ் பொண்ணுன்னு சொல்லிட்டு பிராக் போட்டுட்டு சுத்திட்டு இருக்கன்னு, நான் கேட்டிருப்பேன் நானாவது கவுன் போட்டுட்டு சுத்தினேன், இது ஜட்டி போட்டுட்டு சுத்துச்சி என்று ஷாக்ஷியை கேவலமாக கிழித்துள்ளார்.