சிந்து சமவெளி என்ற படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர், அமலாபால். இதன்பிறகு பிரபுசாலமன் இயக்கத்தில் “மைனா” என்ற படத்தில் நடித்து தனது கௌரவத்தை மீட்டுக்கொண்டார். இந்த படம் அவருக்கு ஒரு திருப்புமுனையாக இருந்தது.
இதன்பிறகு முன்னணி நடிகர்களான விஜய்,விக்ரம் ஆகியோருடன் ஜோடி சேர்ந்து நடித்தார். இயக்குனர் விஜயின் ஃபேவரிட் ஆக இருந்த அமலாபால், அவர் இயக்கிய சில படங்களில் தொடர்ச்சியாகவே காணப்பட்டார்.
இதன் காரணமாக அவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டு திருமணமும் ஆனது. இந்நிலையில் ஒரே வருடத்தில் விவாகரத்து பெற்றதும் குறிப்பிடத்தக்கது. விவாகரத்துக்குப் பின்னும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்த இவர்,கடைசியாக ஆடை எனும் படத்தில் நிர்வாணமாக தோன்றி அதிர்ச்சி அளித்தார்.
இருப்பினும் கதையின் முக்கியத்துவம் கருதி அவ்வாறு நடித்ததாக சப்பைக்கட்டு கட்டினார். ஆடை படமும் அந்த அளவு சரியாக போகவில்லை. இந்த நிலையில் தான், ஒரு பப்பில் குடி போதையில் தடுமாறிய அமலாபாலை அவர் நலம் விரும்பிகள் புகைப்படம் எடுத்து வலைதளங்களில் உலாவ விட்டனர்.