கவிஞர் சினேகன் கேள்வி! புளுவேல் விளையாட்டு நிச்சயமாக இது பற்றி கேள்விபடாதவர்கள் இருக்க முடியாது. சமீபத்தில் இந்த புளூவேல் என்ற விளையாட்டு காரணமாக உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டது உலகத்தையே உலுக்கியது. இன்றைக்கு இருக்கின்ற பொருளாதார சூழலில் கணவன் மனைவி இரண்டு பேருமே வேலைக்கு போக வேண்டிய நிர்பந்தம். படித்தால் தான் வாழமுடியும் ஏன் உயிரோடுவே இருக்கமுடியும் என்ற மனநிலைக்கு எல்லாரும் மாறிவிட்ட நிலையில், பிள்ளைகளுக்கோ பள்ளிகளில் ஏற்படும் நெருக்கடி. பெற்றோர் அரவணைப்பில் இருக்க வேண்டிய வயதில் பிள்ளைகள் தனிமையில் தள்ளப்படுகிறார்கள். அவர்களின் தனிமையைத் தங்களுக்குச் சாதகமாக்கிதான் புளுவேல், மோமோ, பப்ஜி போன்ற ஆன் லைன் கேம்கள் இளைஞர்களை கொன்று குவிக்கிறது. அவர்களை மீட்கவும் பிள்ளைகள் தான் செல்வ
