சென்னை:
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள வனிதாவை நடிகர் கமல்ஹாசன் இன்றும் அசிங்கப்படுத்துகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள வனிதா விஜயகுமாரைதான் நடிகர் கமல்ஹாசன் இந்த வாரம் டார்கெட் செய்துள்ளார் போல. நேற்று அடுத்தவர் விஷயத்தில் தலையிட வேண்டாம் என மேம்போக்காக சொல்லி சூடு போட்டார். இன்றும் அவரையே குறி வைத்து வச்சு செய்து வருகிறார் கமல். இன்று வெளியான முதல் புரமோவில் என்னை கொஞ்சம் பேச விடுங்கள் ப்ளீஸ் என்று மூக்கை உடைத்த கமல், தொடர்ந்து அவரை அசிங்கப்படுத்தியிருக்கிறார்.
கமல் கேள்வி
இது இன்று வெளியான இரண்டாவது புரமோவில் தெரியவந்துள்ளது. அதில், இந்த வாரம் பெஸ்ட் பர்ஃபாமர் யார் என கேட்கிறார் நடிகர் கமல்ஹாசன்.
அதற்கு வனிதா மற்றும் தர்ஷன் என பதிலளிக்கிறார் ஷெரின். உடனே கமல் நீங்களா செலக்ட் பண்ணீக்கிட்டீங்களா என்று கேட்கிறார்? அப்போது கவின், மாட்னீயா என்பதை போல உதட்டை கடித்தப்படி நக்கலாக சிரித்து தலையை ஆட்டுகிறார்.
அதற்கு வனிதா இல்லை என்று கூறுகிறார். எல்லோரும் சேர்ந்துதானே பேசி செலக்ட் செய்ய வேண்டும் என கமல் மீண்டும் கேட்க, மக்கள் கைத்தட்டி ஆர்ப்பரிக்கின்றனர். அப்போது எல்லாத்துக்கும் கைத்தட்டி என்னை வம்புல மாட்டிவிட்டுடுவிங்க என்கிறார் கமல்.
நான்கு பேரும் பேசிதான் முடிவு செய்தோம் என்கிறார் சேரன். ஆனால் தர்ஷன் இல்லை என்று கூறுகிறார். இதற்கும் மக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்கின்றனர். இப்படியாக உள்ளது இரண்டாவது புரமோ.
நேற்று வனிதாவை ஒரு வழி செய்த கமல் இன்றும் அவரை போதும் போதும் என்று கூறும் அளவுக்கு விளாசி வருகிறார். ஆனால் கவினை மட்டும் ஒன்றும் கேட்காமல் அமைதி காத்து வருகிறார்.
வனிதாவிடம் மட்டும் சாட்டையை சுழற்றும் கமலை சமூக வலைதளங்களில் சிலர் பாராட்டி வருகின்றனர். சிலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.