வரலாறு தெரியாத சின்ன புள்ள.. மன்னிச்சு விட்டுடலாம்.. ஒபி ரவீந்திரநாத் குறித்து சீமான்.
சென்னை:
ஒபி ரவீந்திரநாத் இந்துக்களாய் ஒன்றிணைவோம் என கருத்து தெரிவித்ததை பற்றிய கேள்விக்கு, ‘வரலாறு தெரியாத சின்ன புள்ள, ஆர்வக்கோளாறான பேச்சு, மன்னித்து விட்டு விடலாம் அவருக்கு ஒன்றும் தெரியல என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் பத்தாண்டு பசுமைத்திட்டம் மற்றும் பனைத் திட்டங்களின் முன் மாதிரி முன்னெடுப்பாக ஒரே நாளில் பத்து இலட்சம் பனை விதைகளை நடவு செய்யும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
சென்னை கோவிலம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள நாராயணபுரம் ஏரியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பனைகளை விதைத்து இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
நாட்டையே சோகத்தில் மூழ்கடித்த விக்ரம் லேண்டர் எங்கிருக்கிறது என கண்டுபிடிப்பு.. இஸ்ரோ தலைவர்
சந்திரயான் 2 தோல்வி அல்ல
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம்: சந்திராயன் 2 தோல்வி அடைந்து இருப்பதாக செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த சீமான், “இதை தோல்வியாக பார்க்கக் கூடாது, முயற்சி ஓர் வெற்றி, முயன்று பார்க்காமல் தோற்றால் தான் அது தோல்வி, தற்போது நடைபெற்ற தவறுகளை சரி செய்து கொண்டு அடுத்த முயற்சியில் வெற்றி அடைவார்கள். அந்த வலிமையும் ஆற்றலும் தமிழர்களுக்கு உண்டு என்றார்.
திசை திருப்பும் முயற்சி
பிரதமர் மோடி இஸ்ரோ தலைவர் சிவனுக்கு ஆறுதல் கூறியதை வைத்து எச் ராஜா மோடி தமிழர்களுக்கு ஆதரவு அளிப்பவர் என டிவிட் செய்துள்ளது குறித்து செய்தியாளர் ஒருவர் சீமானிடம் கேட்டார். அதற்கு பதில் அளித்த சீமான், எல்லோரின் கவனத்தையும் திருப்பி பொருளாதார வீழ்ச்சியை திசை திருப்பும் முயற்சி என்றார்.
மன்னித்து விடலாம்
ஒபிஎஸ் மகனும் தேனி தொகுதி எம்பியுமான ஒபி ரவீந்திரநாத் இந்துக்களாய் ஒன்றிணைவோம் என கருத்து தெரிவித்ததை பற்றிய கேள்விக்கு, ‘வரலாறு தெரியாத சின்ன புள்ள, ஆர்வக்கோளாறான பேச்சு, மன்னித்து விட்டு விடலாம் அவருக்கு ஒன்றும் தெரியல. அமைச்சர் பதவிக்காக கூட அப்படி பேசலாம். அதை நாம் முக்கியதுவம் தர தேவையில்ல என சீமான் கூறினார்.
ஆளுநர் பதவி ஏன்
ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் குறித்த கேள்விக்கு, நிர்வாகத்தின் தலையீடு என்று ஒற்றை வரியில் சீமான் முடித்துக் கொண்டார். பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை ஆளுநரானது குறித்த கேள்விக்கு பதில் அளித்த சீமான்,
தமிழிசை சௌந்திரராஜனுக்கு ஆளுனர் பதவி ஒர் ரப்பர் ஸ்டாம்ப் போன்றது. அதை ஓர் அங்கீகாரம், அதிகாரம் என பேசி கொண்டு இருகிறீர்கள். கட்சியில் வேறு தலைவரை நியமிக்க பிரச்சனை வரக் கூடாது என ஆளுநர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்றார். ஒரே நாடு ஓரே ரேஷன் கார்டு திட்டம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த சீமான், ‘இது ஓர் சாபக்கேடு’ என்றார்.