உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 95. இவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முன்னதாக ராம் ஜெத்மலானி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சியின் போது மத்திய சட்டத்துறை அமைச்சராகவும், நகர்புற வளர்ச்சிதுறை அமைச்சராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
