Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Actress Jyothika-Thanks-Education-Minister-Of-Malaysia-www.indiastarsnow.com

மலேசிய அமைச்சருக்கு நன்றி தெரிவித்து ஜோதிகா கடிதம் எழுதியுள்ளார்

Posted on September 8, 2019September 8, 2019 By admin No Comments on மலேசிய அமைச்சருக்கு நன்றி தெரிவித்து ஜோதிகா கடிதம் எழுதியுள்ளார்

கெளதம் ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் வெளியான படம் ‘ராட்சசி’. இப்படம் அரசு பள்ளி மற்றும் அதன் நிலை எப்படி உள்ளது என்பதனை வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. இப்படத்தை பார்த்து விட்டு அந்த கருத்தை பாராட்டி மலேசிய அமைச்சர் மாஸ்லே பின் மாலிக் சமூகவலைத்தள பக்கத்தில் பாராட்டியதை நாம் முன்பே பகிர்ந்திருந்தோம்.

இந்நிலையில் மலேசிய அமைச்சருக்கு நன்றி தெரிவித்து ஜோதிகா கடிதம் எழுதியுள்ளார். இதனை சூர்யா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதன் விவரம்
ஒரு இந்திய திரைப்படத்தை பார்த்து பாராட்டி நீங்கள் ட்வீட் செய்தது மகிழ்ச்சியாக உள்ளது. அந்த படத்தில் கூறியது போல் கல்வியில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்ற சிந்தனைக்கு நன்றி. கல்வி கொள்கையில் சிறிய மாற்றத்தையாவது ஏற்படுத்த வேண்டும் என்ற எங்கள் டீம்மின் நோக்கிற்கு உங்கள் பாராட்டு உத்வேகத்தை தந்தது.

இந்த படத்தில் பணிபுரிந்த 90% பேர் அரசு பள்ளியில் படித்ததால் அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் இந்த படத்தில் காமித்தோம் திரையில். பணம் பண்ணும் நோக்கில் எடுத்த படம் அல்ல. அடிப்படை மக்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும், அனைத்து தரப்பினர்களும் கல்வி விஷயத்தில் சமமாய் நடத்தப்பட வேண்டும் என்ற எங்களது எண்ணத்தின் ஒரு சிறு வெளிப்பாடு தான் இந்த படம்.

இந்தியாவில் மிகப்பெரிய கல்வி மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற எங்களது இந்த முயற்சிக்கு எங்களது கல்வி அமைச்சரும் இந்த படத்தை பார்த்து பாராட்டியது எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது, மேலும் சில மாறுதல்களையும் செய்ய உள்ளார் அவர். எங்கள் படக்குழுவினர்களுக்கு நீங்கள் கொடுத்த பாராட்டு இந்த படத்தையும் இதன் கருத்தையும் உலக அளவில் எடுத்து செல்ல உதவியாய் இருக்கும்.

Cinema News Tags:Actress Jyothika-Thanks-Education-Minister-Of-Malaysia-www.indiastarsnow.com, மலேசிய அமைச்சருக்கு நன்றி தெரிவித்து ஜோதிகா கடிதம் எழுதியுள்ளார்

Post navigation

Previous Post: குழந்தை பிறந்த பின் எமி மற்றும் ஜார்ஜின் திருமணம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது
Next Post: வனிதாவை அசிங்கப்படுத்திய கமல்! கவின் ஹேப்பி!

Related Posts

சாதனை படைக்கும் பிரசாந்த் வர்மாவின் பான் இந்திய திரைப்படமான ‘ஹனு-மேன்’ டீசர் Cinema News
kalyana-veedu-indiastarsnow.com கல்யாண வீடு சீரியல் தற்போது யூடியூப்பில் பார்க்க முடியாது Cinema News
தென்னிந்திய திரைத்துறையை கலக்கும் நடிகை ரிது வர்மா ! தென்னிந்திய திரைத்துறையை கலக்கும் நடிகை ரிது வர்மா ! Cinema News
மிருகா’ படத்தின் மோஷன் டீசர் வெளியீடு மோஷன் டீசர் Cinema News
Amazon Original series Suzhal 5 reasons why we can’t wait to watch upcoming Amazon Original series Suzhal – The Vortex after watching its intriguing trailer* Cinema News
ஏலே படத்தில் குச்சி ஐஸ் விற்கும் சமுத்திரகனி-indiastarsnow.com Actor Samuthirakani sells ‘Kuchi Ice’ at Aelay UPCOMING FILM Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme