சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப் பிள்ளை படத்தின் அப்டேட்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் ‘நம்ம வீட்டு பிள்ளை’. இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார். மேலும் இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளது. இதனை முன்னிட்டு நாயகன் சிவகார்த்திகேயன், இயக்குநர் பாண்டிராஜ், நாயகி அனு இமாணுவேல் உள்பட பலர் கேக் வெட்டி கொண்டாடினர்.