நடிகை தேவயானி மற்றும் நகுல் ஆகியோர்களின் தாயாரான லஷ்மி ஜெய்தேவ், கடந்த சில தினங்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார்.
தாயாரை இழந்து தேவயானி, நகுல் குடும்பமே தற்போது சோகத்தில் மூழ்கியுள்ளனர். இவரின் மறைவு குறித்து அறிந்த பல பிரபலங்கள் தொடர்ந்து இவர்களுக்கு தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.