தெலுங்கு திரையுலகில் அதிக கவனம் செலுத்த துவங்கினார். அங்கு பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபல நடிகையாக சார்மி மாறினார். தற்போது இவர் 30 வயதை கடந்து விட்டதால் திரையுலகில் நடிக்க படவாய்ப்புகள் பெரிதாக கிடைக்கவில்லை. எனவே தயாரிப்பு நிறுவனம் துவங்கி அதில் சில படங்களை தயாரித்து வருகிறார்.
இந்நிலையில் பிரபல டோலிவுட் இயக்குனர் புரி ஜெகன்நாத்திற்கும், இவருக்கும் காதல் தொடர்பு உள்ளதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. மேலும் இருவரும் லிவிங் டூ கெதர் வாழ்க்கை வாழ்கின்றனர் என்றும் பல தகவல்கள் டோலிவுட்டில் பரவியுள்ளன.
ஆனால் சார்மி வேலை காரணமாக மட்டுமே தனக்கு புரி ஜெகநாத்துக்கும் சம்பந்தம் உள்ளது என்று கூறிவந்தார். புரி ஜெகன்நாத் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதால் இந்த கிசுகிசு அவருடைய குடும்ப வாழ்க்கையிலும் மிகப் பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் புரி ஜெகன்நாத் கடந்த இரு தினங்களுக்கு முன், தன்னுடைய 23 ஆவது திருமண நாளை கொண்டாடினார். இந்த தம்பதிகளுக்கு வாழ்த்து கூறும் விதமாக நடிகை சார்மி புரி ஜெகன்நாத் அவருடைய மனைவியுடன் மிகவும் சந்தோஷமாக கட்டி அணைத்து அமர்ந்திருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.