சென்னையில் 2 ஆயிரத்து 300 விநாயகர் சிலைகள் இன்று கடலில் கரைப்பு…
விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னையில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் இன்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படுகின்றன. பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் நகரில் 2 ஆயிரத்து 600 விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டிருந்தன.
கடந்த 5ந் தேதியும், நேற்றும் சிலைகள் கடலில் கரைக்கப்பட்ட நிலையில், சுமார் விநாயகர் சிலைகள் இன்று கடலில் கரைக்கப்பட உள்ளன. பட்டினப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு, எண்ணூர், திருவொற்றியூர் ஆகிய இடங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விநாயகர் சிலை ஊர்வலப் பாதைகளிலும், சிலைகள் கரைக்கும் இடங்களிலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். அனுமதிக்கப்பட்ட வழியில்தான் ஊர்வலம் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகள் ஊர்வலத்தையொட்டி ஆங்காங்கே போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.