Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

அசுரன் ட்ரைலரில் ஒவ்வொரு காட்சியிலும் மாஸ் காட்டும் தனுஷ்

அசுரன் ட்ரைலரில் ஒவ்வொரு காட்சியிலும் மாஸ் காட்டும் தனுஷ்

Posted on September 8, 2019 By admin No Comments on அசுரன் ட்ரைலரில் ஒவ்வொரு காட்சியிலும் மாஸ் காட்டும் தனுஷ்

நடிகர் தனுஷ், இதுவரை நடித்திராத மிகவும் வித்தியாசமான கெட்டப்பில், இரட்டை வேடங்களில் நடித்து வரும் திரைப்படம் ‘அசுரன்’. இந்த படத்தை தனுஷின் ஆஸ்தான இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வருகிறார், கலைப்புலி தாணு இந்த படத்தை தயாரித்து வருகிறார்.

இந்த படம், அக்டோபர் 4 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என கடந்த ஓரிரு தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்திருந்த நிலையில், சரியாக 6 :20 மணிக்கு இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

ட்ரைலர் காட்சியில் தனுஷ் மிகவும் ஆக்ரோஷ முகத்துடன் தோன்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதே போல் ஒரு சில காட்சிகளில், தமிழில் முதல் முறையாக தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் மஞ்சு வாரியார் வந்து செல்கிறார். ட்ரைலரில் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும், ரசிகர்கள் மனதில் பதியும் வண்ணம் உள்ளது. மேலும் இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், யோகி பாபு, ஆடுகளம் நரேன், உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். குறிப்பாக இந்த ட்ரைலரின் கடைசியில் நம்ம கிட்ட காடு இருந்த வாங்கிப்பானுங்க, காசு இருந்த புடிங்கிப்பானுக… படிப்ப மட்டும் யாராலயும் வாங்கிக்க முடியாது என தனுஷ் கூறும் வார்த்தை, நச் என மனதில் பதிகிறது.

இரட்டை வேடத்தில் தோன்றி தனுஷ் மாஸ் காட்டும் ட்ரைலர் இதோ…

Genaral News Tags:அசுரன் ட்ரைலரில் ஒவ்வொரு காட்சியிலும் மாஸ் காட்டும் தனுஷ்

Post navigation

Previous Post: தெலங்கானா ஆளுநராக பதவியேற்ற திருமதி.தமிழிசை சௌந்தரராஜன்
Next Post: புகையிலையால் பாதித்த நுரையீரலுக்கு…நுரையீரலை பலப்படுத்தும் டிரிங்க்

Related Posts

‘போர்குடி’ படத்தின் முதல் பாடலின் வீடியோ வெளியீடு Genaral News
Hyderabad-techie-kills-herself-family-shares-horrifying-indiastarsnow.co தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் தற்கொலை செய்து கொண்ட பெண் – அதிர்ச்சி சம்பவம் Genaral News
தமிழில் திரைப்படத் தயாரிப்பில் இறங்கும் தோனி என்டர்டெய்ன்மெண்ட் Dhoni Entertainment forays into mainstream film production with a Tamil film Genaral News
கலைஞர் வாழ்ந்து கொண்டிருப்பதாக கவிஞர் வைரமுத்து நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் Genaral News
மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார் Genaral News
கந்தாரா திரைவிமர்சனம்.!! Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme