மாடலிங்கின் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். எனினும் பிக் பாஸ், இருட்டு அறையில் முரட்டு குத்து படம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் பெற்று தந்தது. இவர் தன் ட்விட்டர் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் போட்டோஸ் பதிவிட்டு லைக்ஸ் குவிப்பது வாடிக்கை. நேற்று ரிலீஸ் ஆன தனது ஜாம்பி பட ப்ரோமோஷனுக்காக ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் செஷன் நடத்தினார். அதில் தான் தல அஜித் பற்றி கூறியுள்ளார் .
தல அஜித்தை பற்றி, மலேசிய ரசிகர் கேட்டதற்கு அவர் கூறியது.”என்றுமே எனக்கு இன்ஸபிரேஷன் அவர். இந்தளவு உயரத்துக்கு சென்றும் தன்னடக்கத்துடன் இருப்பதும் அவர் நடந்துகொள்ளும் விதமும் பிடிக்கும்.”
ஒரு வார்த்தையில் அஜித் பற்றி என்ற கேள்விக்கு “கனவு” என சொன்னார்.