புதிய திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, ஹெல்மெட் இல்லாமல் இரு சக்கர வாகனம் ஓட்டினால் ₹1000 அபராதம் விதிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
என்ன தான், அபராதத தொகை அதிகரித்தாலும், மக்கள் அதே குற்றத்தை மீண்டும் மீண்டும் செய்யக்கூடும், மேலும் அவர்கள் அபராதத்திற்க்கு பயந்து, ஹெல்மெட் நிச்சயம் அணிவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
ராஜஸ்தான் அரசு மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தை ஓட்டுபவர்களுக்கு ₹ 1000 சல்லானுடன் இலவசமாக ஐ.எஸ்.ஐ ஹெல்மெட்டை அரசாங்கம் வழங்குவதாக அறிவித்துள்ளது.
புதிய திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ், சட்டத்தை மீறுபவர்களுக்கு, கடுமையான அபராதங்களை செயல்படுத்த முடியாது என்று முன்னதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
மாநில போக்குவரத்து அமைச்சர் பிரதாப் சிங் கச்சரியாவாஸ், மக்களின் உணர்வுகளை மனதில் கொண்டு ராஜஸ்தானில் புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் மற்றும் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ₹ 1000 அபராதம் செலுத்துபவர்களுக்கு இலவச ஹெல்மெட் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.