Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Actress-Vani-Bhojan-Glam-Photo-shoot-Stills-www.indiastarsnow.com

நயன்தாராவால் அப்செட்டான சின்னத்திரை நயன்தாரா வாணி போஜன்

Posted on September 7, 2019September 7, 2019 By admin No Comments on நயன்தாராவால் அப்செட்டான சின்னத்திரை நயன்தாரா வாணி போஜன்

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘தெய்வமகள்’ சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தவர் வாணி போஜன். அதற்கு முன்பு மாடலிங் செய்து வந்த இவர், தெய்வமகள் சீரியலில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து, தமிழகத்தின் சந்து பொந்துகளிலெல்லாம் பிரபலமாகிவிட்டார்.

Vani-Bhojan-www.indiastarsnow.com

தொடர்ந்து சில சில சீரியல்களில் நடித்த வாணி போஜனுக்கு பல சினிமா வாய்ப்புகள் வந்தாலும், நல்ல கதைக்காக காத்திருந்தவர் கையில் தற்போது மூன்று படங்கள் இருக்கிறது. நடிகர் நிதின் சத்யா தயாரிப்பில் வைபவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் வாணி, பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் ஒரு படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். மேலும், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

Vani-Bhojan-www.indiastarsnow.com

சின்னத்திரையில் மக்களிடம் அதிகம் பிரபலமாக இருக்கும் வாணி போஜனை சின்னத்திரைக்கு ‘சின்னத்திரை நயன்தாரா’ என்ற பட்டத்தை கொடுத்தார்கள். இது வாணிக்கு பெருமையாக இருக்கும் என்று நினைத்திருந்த நிலையில், அந்த பட்டத்தால் அவர் ரொம்பவே அப்செட்டாகியிருப்பது தெரிய வந்திருக்கிறது.
Actress-Vani-Bhojan-Glam-Photo-shoot-Stills-www.indiastarsnow.com

நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட வாணி போஜனிடம், “சின்னத்திரை நயன்தாரா பட்டம் கொடுத்ததால், அவரைப்போலவே டிரெஸ் பண்றீங்களா? என்று நிருபர் ஒருவர் கேட்டதற்கு, “எப்படியெல்லாம் ஒன்றுமில்லை, நான் எப்போதும் போல தான் டிரெஸ் பண்ணுகிறேன். அதுமட்டும் அல்ல, சின்னத்திரை நயன்தாரா என்ற பட்டம் தெரியாம கொடுத்துட்டாங்க, அத பத்தி பேசாதீங்க” என்று சிரித்தபடியே, கடுப்பாக பதில் அளித்தார்.
Actress-Vani-Bhojan-Glam-Photo-shoot-Stills-www.indiastarsnow.com

Cinema News Tags:Actress-Vani-Bhojan-Glam-Photo-shoot-Stills-www.indiastarsnow.com, நயன்தாராவால் அப்செட்டான சின்னத்திரை நயன்தாரா வாணி போஜன்

Post navigation

Previous Post: சூப்பர்ஸ்டார் ரஜினி மக்களிடம் விலை உயர்ந்த பொருட்களை திருடி விட்டனர்
Next Post: தல 60 படப்பிடிப்பு இம்மாதம் துவங்க உள்ளது

Related Posts

Tabu-promoting-hot-www.indiastarsnow.com காதல் தேசம் படத்தின் நடிகை தபு சமீபத்தில் போட்டோ ஷூட் Cinema News
டிகர் சிபிராஜ் காவல் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடித்து ரிலீஸ் ஆக உள்ள வால்டர் திரைப்படத்தின் டிகர் சிபிராஜ் காவல் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடித்து ரிலீஸ் ஆக உள்ள வால்டர் திரைப்படத்தின் Cinema News
Herewith i forward the press release pertaining to "Web Series title "Kanni Raasi " வெப் சீரிஸில் தமிழின் முதல் 100 மில்லியனை எட்டிய குழுவின் அடுத்த அதிரடி வெப் சீரிஸ் ஆரம்பம் ! Cinema News
பிரைம் வீடியோவின் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட தமிழ் க்ரைம் த்ரில்லர் திரைப்படமான, வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி, டிசம்பர் 2 அன்று உலகம் முழுவதும் திரையிடப்பட உள்ளது Cinema News
நடிகர் சந்தானம் ஜி (ZI ) கிளினிக்கின் 3-வது கிளை திறந்துவைத்தார்-indiastarsnow.com நடிகர் சந்தானம் ஜி (ZI ) கிளினிக்கின் 3-வது கிளை திறந்துவைத்தார் Cinema News
uthraa-movie-poster உத்ரா – சினிமா விமர்சனம் Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme