நடிகை பார்வதி நம்பியாருக்கு திருமணம் முடிவாகி உள்ளது. வினித் மேனன் என்பவரை மணக்கிறார். பார்வதி நம்பியார்-வினித் மேனன் திருமண நிச்சயதார்த்தம் கேரள மாநிலம் கொச்சியில் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள். நிச்சயதார்த்த புகைப்படத்தை பார்வதி நம்பியார் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார். திருமணம் எப்போது என்பதை அவர் தெரிவிக்கவில்லை. திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்க போவதில்லை என்ற முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது.
