தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் சினிமாவில் அறிமுகமாக ஆசைப்பட்டார். அவர் தேர்ந்தெடுத்த கதை ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடிய அர்ஜுன் ரெட்டி. தனக்கு சினிமாவில் வாழ்க்கையை அமைத்துக் கொடுத்த பாலாவை வைத்து எடுத்தார். படம் சரியாக வரவில்லை. அதை தூக்கிப் போட்டார். மறுபடியும் வேறு இயக்குனரை வைத்து படப்பிடிப்பு ஆரம்பமாகி இப்பொழுது முடிவடைந்துள்ளது.
ஆனால் திரைக்கு வருமா? ஒரு நடிகர் தன் மகனை சினிமாவில் அறிமுகப்படுத்த ஏன் மற்ற மொழிகளில் உள்ள கதைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். அர்ஜுன் ரெட்டி அந்தப் படத்தின் கதையை ஒரே வரியில் சொல்லிவிடலாம். அது கதையே இல்லை. திரைக்கதை காகவும் இயக்கத்திற்கும் அந்த படம் ஓடியது. அதனை தமிழில் அப்படியே எடுத்தால் ஓடாது என பாலாவுக்கு தெரியும்.
சிறு மாறுதல்கள் செய்தால்கூட திரைக்கதையே போய்விடும். குழப்பமான படம். தெலுங்கு சினிமா வேறு தமிழ் சினிமா வேறு. தமிழுக்கு ஏற்றது போல் மாற்றினால் திரைக்கதை போய்விடும் பின்பு இயக்கத்தை வைத்து ஒன்றுமே செய்யமுடியாது.
இன்று தமிழ் சினிமாவில் எத்தனையோ இயக்குனர்கள் உள்ளனர். எத்தனையோ உதவி இயக்குனர் உள்ளனர். இன்று சங்கத்தின் கணக்குப்படி பத்தாயிரம் உதவி இயக்குனர்கள் பதிவு செய்துள்ளனர். இரண்டு லட்ச உதவி இயக்குனர்கள் பதிவு செய்யாமல் உள்ளனர். இவர்களிடம் இல்லாத கதையா தன் மகனை அறிமுகப்படுத்த.
அர்ஜுன் ரெட்டி பல கோடிகள் கொடுத்து வாங்கினார். ஏன் ஒரு நூறு உதவி இயக்குனர்களை வரவழைத்து அவர்களிடம் கதை கேட்டு ஒரு நல்ல கதையை தேர்ந்தெடுத்து படமாக்கி இருந்தால் எப்படி இருக்கும். இன்று எத்தனையோ உதவி இயக்குனர்கள் விக்ரம் மகனை வைத்து படம் எடுக்க வேண்டும் என விக்ரம் வீட்டிற்கும் அவருடைய அலுவலகத்திற்கும் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்களை விக்ரம் வீட்டில் இருக்கும் செக்யூரிட்டிகள் சார் இல்லை இல்லை என துரத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களை பார்ப்பாரா கதை கேட்பாரா? இன்று விக்ரம் படப்பிடிப்புகளில் பிசியாக இருந்தாலும் தன் மகனுக்காக கதை சொல்ல வரும் உதவி இயக்குனர்களுக்கு வாய்ப்புக் கொடுத்தால் நன்றாகத்தான் இருக்கும்.
துருவ் விக்ரம் சினிமாவில் வெற்றி பெற்று ஹீரோவாக வலம் வருவாரா? வருவார் புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால். துருவ் விக்ரம் வெற்றிக்காக எதிர்பார்க்கும்