தனது சம்பளத்தை குறைத்து கொண்டார் நடிகை காஜல் அகர்வால்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயின்கள் ஒரு படத்திற்கு 2 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளம் பெறுகின்றனர். இங்கு தென்னிந்திய சினிமாவில் வடநாட்டு நாயகிகள் அதிகம். ஆனால், இங்கிருந்து சென்று பாலிவுட்டில் ஜெயித்தவர்கள் ஒரு சிலரே.
இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது ஒரு ஹிந்தி படத்தில் கமிட் ஆகியுள்ளார். ஜான் ஆப்ரஹாம் நடிக்கும் ‘மும்பை சாகா’ என்ற படத்தில் காஜல் ஒரு முக்கிய ரோலில் நடித்துள்ளார். இந்த படத்திற்காக காஜல் வெறும் 30 லட்சம் ருபாய் மட்டுமே சம்பளமாக பெற்றுள்ளார். இது பலருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் வாய்ப்பிற்காக சம்பளத்தை இவ்வளவுக்கு குறைத்துவிட்டாரா என பலரும் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.