ரசல் அர்னால்ட் – இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர். தற்பொழுது கமெண்ட்ரியில் பிஸியாக உலகம் சுற்றி வருபவர். தமிழிலும் வர்ணனை செய்து கலக்குகிறார் மனிதர். அடிக்கடி விஜய், அஜித், விஜய் சேதுபதி பட வசனங்களையும் கிரிக்கெட் அல்லது சினிமா சமாச்சாரங்களை பற்றியும் ஸ்டேட்டஸ் தட்டுவார்
ஸ்ரீனி மாமா – இந்த த்விட்டேர் பக்கத்தை டேக் செய்து தான் இவரின் பெரும்பாலான பதில்கள் இருக்கும். அந்தவகையில் தான் வெறித்தனம் பாடல் பற்றி அந்தப்பக்கத்தில் போட்டிருந்த ஸ்டேட்டஸுக்கு பதில் தட்டினார் ரசல் மேலும் பாடல் நியாமாகவே வெறித்தனம் படத்தை பார்ப்பதற்கு ஆர்வமாக இருக்கிறேன் முதல் நாள் முதல் ஷோ டிக்கெட் கிடைக்குமா தளபதி ரத்தங்களே எனக்கு உதவுங்கள் என்றும் சொல்லிவிட்டு தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அவர்களையும் டாக் செய்துள்ளார்.