சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம் ஸ்டாலின் சிறைக்கு செல்வார் என்று ராஜா கூறியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த ஜெயக்குமார், ஆமாம் அதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று கூறி ஒரு குண்டை தூக்கிப் போட்டார். பாருங்கள், ப.சிதம்பரம் சிறைக்கு சென்ற பிறகு ஸ்டாலின் மத்திய அரசை விமர்சிப்பதை குறைத்துக் கொண்டார். மத்திய அரசுக்கு எதிரான ஸ்டாலின் பேச்சில் ஒரு மென்மை தெரிகிறது. இதற்கெல்லாம் என்ன காரணம் ஜெயிலுக்கு நாமும் செல்ல வேண்டி வரும் என்கிற பயம் தான் என்று அதிரடியாக கூறினார் ஜெயக்குமார்.
தல் நாள் ஹெச்.ராஜாவும் இதே போன்றதொரு கருத்தை கூற மறுநாள் ஜெயக்குமாரும் இப்படி ஒரு கருத்தை கூறியுள்ளார். இதனால் எதற்காக ஸ்டாலினுக்கு சிறை என்பதை மையமாக வைத்து திடீரென தமிழக அரசியல் உடன்பிறப்புகளுக்கு குழப்பம் எழுத் தொடங்கியுள்ளது.
