Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

பொம்மி வீரன்-www.indiastarsnow.com

பொம்மி வீரன் திரைப்படம் கட்டைக்கூத்தை மையமாக கொண்டது

Posted on September 6, 2019 By admin No Comments on பொம்மி வீரன் திரைப்படம் கட்டைக்கூத்தை மையமாக கொண்டது

உழவன் திரைக்களம் சார்பாக கவிஞர் சினேகன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படம், பல்வேறு காரணங்களால் வெகுவேகமாக அழிந்து வரும் கலையான பொம்மி வீரன்

ஒரு கட்டைக்கூத்து கலைஞனின் வாழ்வை, அதன் பல்வேறு பரிமாணங்களை, மண்ணின் மணமும், குணமும், இயல்புகளும் மாறாமல், விவரிக்கும் ஒரு உணர்வுப்பூர்வமானத் திரைப்படம்.

இப்படத்தில் கட்டைக்கூத்து கலைஞனாக நடித்திருக்கும் கவிஞர் சினேகன், அதற்கென சிறப்பு பயிற்சிகள் எடுத்து நடித்திருக்கிறார். இவருக்கு இணையாக நடித்திருக்கும் நாட்டியா, இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகிறார்.
பொம்மி வீரன்

மேலும் கே பாக்யராஜ் ,ஊர்வசி, சிங்கம்புலி, பவர்ஸ்டார், முத்துக்காளை, சந்தான பாரதி, போண்டாமணி, இ.ராமதாஸ், டிபி கஜேந்திரன், ‘தாரை தப்பட்டை’ ஆனந்தி, கனிகா மற்றும் பலர் உள்ளிட்ட பல சிறப்பான கலைஞர்கள் நடித்திருக்கிறார்கள்.

சாலை சகாதேவன் ஒளிப்பதிவு செய்ய, ராம் சுதர்சன் படத்தொகுப்பை கவனித்து இருக்கிறார்.

தாஜ்நூர் இசையமைக்க, கவிஞர் சினேகன் பாடல்களையும் எழுதி இருக்கிறார்.

கலை இயக்குனர் மார்டின் டைட்டஸ் காட்சிகளுக்கு அழகு சேர்க்க, விஜய் ஜாக்குவார் அதிரடி காட்சிகளுக்கு விறுவிறுப்பு சேர்த்திருக்கிறார்.
அறிமுக இயக்குனர் ரமேஷ் மகாராஜன் இயக்கத்தில், கவிஞர் சினேகன் தயாரித்து-நடித்திருக்கும் ‘பொம்மிவீரன்’, வெகுவிரைவில் வெளியாகி ரசிகர்களை மகிழ்விக்க இருக்கிறது.

Cinema News Tags:பொம்மி வீரன்

Post navigation

Previous Post: ரெமோ சிவகார்த்திகேயன் போலிருக்கும் பிரபல நடிகை
Next Post: நாயகியாக ஶ்ரீதிவ்யா இணைந்திருக்கிறார்

Related Posts

அந்தோணிதாசன் என் படத்தின் ஹீரோ! இயக்குநர் சீனு ராமசாமி பேச்சு! Cinema News
நடிகர் சங்க நில விவகாரம் – சரத்குமார், ராதாரவிக்கு சம்மன் Cinema News
நடிப்பு துறையில் நிறம் முக்கியம் இல்லை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பு துறையில் நிறம் முக்கியம் இல்லை ஐஸ்வர்யா ராஜேஷ் Cinema News
Oththa Serupu Size 7 Film Audio Launch Cinema News
பிரபாஸின் 'சலார்' வெளியிட்டு தேதி அறிவிப்பு The makers of KGF 1&2 drop a new poster of INDIAN FILM SALAAR starring Prabhas; Film to be released on September 28, 2023. Cinema News
Samantha Ruth Prabhu shares a Thanks note addressing the overwhelming response from Audience Samantha Ruth Prabhu shares a Thanks note addressing the overwhelming response from Audience Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme