சூப்பர் ஸ்டார் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படம் வருகின்ற பொங்கலுக்கு ரிலீஸாவதாக அறிவித்துள்ளனர். இருந்தும் இப்படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்ற அனைத்து நிறுவனங்களும் போட்டி போடுகின்றன.
இந்நிலையில் சூர்யா நடித்து இம்மாதத்தில் ரிலீஸ் ஆகும் காப்பான் படத்தின் வட அமெரிக்கா, தமிழ் மற்றும் தெலுங்கு வெளியீட்டு உரிமை1.1 மில்லியன் (3 கோடி) விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ஆனால் ரஜினியின் தர்பார் உரிமை 2.8 மில்லியனுக்கு (9 கோடி) விற்பனை செய்யப்பட்டுள்ளது. சூப்பர்ஸ்டாருக்கு உரிய கெத்தை காட்டுகிறது.
சூர்யா தற்போது சுதா கொங்காரா இயக்கத்தில் சூரரைப்போற்று படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.