சிவப்பு மஞ்சள் பச்சை என்ற படம் போக்குவிதிமுறைகளை மதிக்கும் ஒரு போக்குவரத்து காவல்துறை அதிகாரியாக சித்தார்த் நடித்துள்ளார். இவருடன் இணைந்து ஜிவி பிரகாஷ், தீபா ராமானுஜம், காஷ்மிரா பர்தேஷி, லிஜோமோல் ஜோஷ் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.
கடந்த 2016ம் ஆண்டு சித்தார்த் நடிப்பில் அவள் படம் வெளியானது. இப்படம் தெலுங்கில் தி ஹவுஸ் நெக்ஸ் டோர் என்ற தலைப்பில் வெளியானது. தமிழில் இப்படத்திற்கு போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து 2 ஆண்டுகள் மற்ற மொழிப் படங்களில் சித்தார்த் நடித்து வந்தார். இந்த நிலையில், இன்று மீண்டும் அவரது நடிப்பில் தமிழ் படம் சிவப்பு மஞ்சள் பச்சை வெளியாகியுள்ளது. இந்த படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.
ரேஸ் பைக்களை அதிவேகமாக வாகனம் ஓட்டும் ஜீவி பிராகஷ் மற்றும் போக்குவரத்து போலீஸ் சித்தார்த் இருவரிடம் நடக்கும் மோதல்களே படத்தின் கதை. படத்தின் ஜீவி பிரகாஷ், சித்தார்த் இருவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
சட்டவிரோதமாக பைக்ரேசில் ஈடுபடும் இளைஞர்களை பிடிக்கும் போக்குவரத்து போலீஸ் கேரக்டரில் சிறப்பாக நடித்துள்ளார். இந்நிலையில், ஜீவி பிரகாஷின் சகோதரி லிஜோமோல் மற்றும் சித்தார்த் இருவருக்கும் திருமணம் ஆகிறது. இதை தொடர்ந்து இவர்கள் மூன்று பேர் இடையே நடக்கும் மாமா-மச்சான் மற்றும் அக்கா, தம்பி செண்டிமெட்களுடன் கதை நகர்கிறது.
ஜீவி பிரகாஷ் பைக் ரேசில் ஈடுபடும் இளைஞராக நடித்துள்ளார். வட சென்னையை மையப்படுத்தி அதன் சாயலில் உருவாக்கப்பட்டுள்ள காட்சிகள் ரசிக்க வைக்கிறது. மற்றும் ஜீவி பிரகாஷின் நண்பர்கள் கேரக்டர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். சித்தார்த் ஆக்ஷன் ஹீரோவாகவும், போக்குவரத்து போலீஸ்-ஆகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். குடும்ப பாங்கான தோற்றம் கொண்ட லிஜோமோல், சகோதரி கேரக்டருக்கு மிகச்சரியாக பொருந்தியுள்ளார். எமோஷனல் காட்சிகளில் வெகு சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார். காஷ்மிரா பர்தேஷி இளைமையான தோற்றத்துடன், ஜீவி பிரகாஷ் மீது காதலை வெளிபடுத்துகிறார். இவரது கேரக்டர், மேலே குறிப்பிட்ட மூன்று கேரக்டர்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
லிஜோமோல் ஜோஷ், ஜீவி பிரகாஷ் ஆகியோரின் இளமைகால வாழ்கை அனைவரும் கவரும் வகையில் படமாகப்பட்டுள்ளது. இசையமைப்பளார் சித்து குமார் மெலடி டிராக்கிலும், பைக் ரேஸ் நடக்கும் காட்சிகளின் பின்னணி இசையிலும் சிறப்பாக பணியாற்றியுள்ளார்.