குருவை மிஞ்சிய சிஷ்யன் என்றால் அது அட்லீ தான்.
ஏனென்றால் பிகில் பட தயாரிப்பு செலவு மட்டும் 30 கோடியாம் அப்படி என்றால் படத்தில் விஜய் சம்பளம் மற்ற நடிகர்கள் சம்பளம், அட்லியின் சம்பளம், கேமராமேன் சம்பளம், இசையமைப்பாளர் சம்பளம், டெக்னிசியன் சம்பளம் என ஒட்டுமொத்த தயாரிப்பு செலவும் கேட்டால் நம்மளுக்கு தலை சுற்றி விடும்.
இதுவரை தமிழ்சினிமாவில் எத்தனையோ சினிமாக்கள் வந்திருந்தாலும் பட தயாரிப்பு செலவுஅதிகபட்சமாக 20 கோடிக்குள் அடங்கிவிடும். முதல்முறையாக அட்லி அதை ரெக்கார்ட் பிரேக் செய்து உள்ளார். 30 கோடியை எப்படி செலவு செய்தார் என கோடம்பாக்கம் தலையை பிச்சிகொண்டிருக்கிறது. தயாரிப்பாளரோ போதும் போதும் என அவரின் பிபி எகிற வைத்துள்ளார்.
படப்பிடிப்புகளில் இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் பிரச்சினை ஏற்பட்டாலும் இல்லை
இயக்குனரின் சம்பளம் குறைத்தாலும் சில இயக்குனர்கள் வேண்டும் என்று தயாரிப்பு செலவை அதிகரிக்க வைக்கிறார்கள். பொதுவாக ஒரு பாடல் காட்சிக்கு செட் போட்டால் இருபத்தைந்து முதல் 50 லட்சம் வரை செலவாகும் ஆனால் அதை ஒரு கோடியாக உயர்த்தி காட்டுவார்கள்.