சென்னையை சேர்ந்த ஐடி ஊழியரான பிரதீப் என்பவர் Quikr போன்ற இணையதள முகவரியை பயன்படுத்தி வேலைதேடும் பெண்களின் நிர்வாண புகைப்படங்களை வாங்கி பார்த்து ரசித்துள்ளார்.
பிரதீப் மற்றும் அவரது மனைவி இருவரும் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளனர். மனைவி பகலில் வேலைக்கு செல்ல பிரதீப் இரவில் வேலைக்கு சென்று வந்துள்ளார். இதனால் இருவருக்கும் நெருக்கமான உறவு இல்லை. இந்த மன வேதனையிலிருந்து பிரதீப் தனது தொழில்நுட்பத்தை கொண்டு பெண்களிடம் பேசி அவர்களிடம் நிர்வாண புகைப்படம் மற்றும் பணம் வாங்கியுள்ளார்.
Quikr -ரில் வேலைதேடும் அதாவது 5 ஸ்டார் ஹோட்டலில் வேலை தேடும் பெண்களை தேடி கண்டுபிடித்து அவர்களின் தொலைபேசி எண்ணை அறிந்து கொண்டு அவர்களை தொடர்பு கொண்டு உள்ளார்.
Radisson BLU என்ற 5ஸ்டார் ஹோட்டலில் இருந்து பேசுகிறோம் உங்களுடைய வேலைக்கான விண்ணப்பத்தை Quikr-ரில் இருந்து தேர்வு செய்துள்ளோம் உங்களை எங்களது HR அர்ச்சனா ஜெகதீஸ் WhatsApp தொடர்பு கொள்வார் என்று கூறி விட்டு போனை துண்டித்து உள்ளார்.
பின்னர் ஓரிரு நாள் இடைவெளி விட்டேன் அர்ச்சனா ஜெகதீஷ் என்ற பெயரில் WhatsApp தொடர்புகொள்வார். அப்பொழுது நாங்கள் உங்களை தேர்வு செய்துள்ளோம். உங்களது பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் ஃபுல் சைஸ் போட்டோ எங்களுக்கு அனுப்புங்கள் என்று உரையாடியுள்ளார். வேலை மீது கொண்ட ஆர்வத்தால் தங்களது புகைப்படங்களை அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் நீங்கள் ஹோட்டலின் வரவேற்பாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளீர், இதற்கு தங்களின் உடல் கட்டமைப்பு மிகவும் முக்கியம் அதனால் தங்களது முன் பக்கம் மற்றும் பின் பக்கங்களை போட்டோ எடுத்து அனுப்புமாறு கேட்டுள்ளார். எதிர்முனையில் உள்ளவர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில் லாவா பேசி அவர்களிடம் அரைகுறை புகைப்படத்தையும் வாங்கி உள்ளார்.
பின்னர் வீடியோ காலில் தொடர்புகொண்டு மிரட்டி அவர்களிடம் ஆபாசமாக பேசியுள்ளார். அவர்களையும் தனது ஆடைகளை ஒவ்வொன்றாக கலைக்க சொல்லியும் கேட்டுள்ளார் அதை தனது போனில் ரெக்கார்டு செய்துள்ளார். இதை வைத்துக்கொண்டு அந்த பெண்களை மிரட்டி பணம் வாங்கியுள்ளார் இந்த ஐடி சைக்கோ ஊழியர்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கையில் பிரதீப் என்பவர் 600க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி நிர்வாண புகைப்படத்தை வாங்கியதும் மட்டுமல்லாமல் லட்சக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டி உள்ளது தெரிய வந்துள்ளது.