இன்று படம் எடுக்க வரும் இயக்குனர்கள் யாரை வைத்து படமெடுக்கலாம் என யோசித்து கதையை எடுத்து கொண்டு செல்ல நடிகர்களின் கால் சீட் கிடைக்காமல் முடங்கிப்போய் உள்ளனர். ஒருவேளை கிடைத்தாலும் எந்த நடிகையை போடலாம் என யோசிக்க முடியவில்லை. இது ஒரு பக்கம் இருக்க, இன்று இருக்கும் தமிழ் சினிமா நடிகைகளுக்கு பஞ்சம் பஞ்சம் என தமிழ் சினிமா கூவுகிறது.
நயன்தாரா என்ற கப்பல் தரைதட்டி நிற்க த்ரிஷா, காஜல் அகர்வால், தமன்னா, அனுஷ்கா வயதாகிவிட்டது. ஒரு சில நடிகைகளோ இரண்டு மூன்று படத்தில் காணாமல் போக, கீர்த்தி சுரேஷ் மும்பை பக்கம் கரை ஒதுங்குகிறார். ராசி கண்ணா பவானி சங்கர் தாக்குப் பிடிப்பார்களா என்றால் அவர்களால் முடியவில்லை.
இன்று எல்லா படங்களிலும் காதல் கட்சிகள் உண்டு. காதல் காட்சிகளில் நடிக்க வேண்டுமென்றால் 16 வயது முதல் 24 வயது வரை இருந்தால் ரசிப்பார்கள், இல்லை என்றால் அந்த காட்சிகள் சலிப்பு தட்டும். எப்படி இருந்தாலும் இன்று தமிழ் சினிமாவுக்கு 30 புதுமுக நடிகைகள் வரவேண்டும்.
எத்தனையோ நடிகைகள் தயாராக இருந்தாலும் ஒரு புதுமுக நடிகையை போட எந்த இயக்குனரும் நடிகரும் தயாராக இல்லை. இரண்டு படம் நடித்து வெற்றி பெற்றால் மட்டுமே அந்த நடிகைக்கு மார்க்கெட் இருக்கிறது என எல்லோரும் அழைப்பார்கள்.
முன்புபோல் இப்போது இல்லை 1, 2 படங்களில் நடித்துவிட்டு காணாமல் போய்விடுகிறார்கள் அவர்களால் தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்க முடியவில்லை. இப்படியே போனால் தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் நடிகைகள் என்று யாருமே இல்லை. நாடக நடிகர்களுக்கு பெண் வேடம் போட்டு நடிக்க வைப்பார்கள் அதேபோலத்தான் இப்பொழுது மாறிவிடுமோ என அஞ்சுகிறார்கள்.