தளபதி அட்லியின் இயக்கத்தில் வரும் தீபாவளி அன்று பிகில் படம் வெளிவர காத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் வெறித்தனம் பாடல் வெளிவந்து ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் யூடியூப் சேனலில் 1 மில்லியன் லைக்கை அள்ளி குவித்தது.
இதனால் கடுப்பான தல ரசிகர்கள் இந்த 1 மில்லியன் லைக்கும் காசு கொடுத்து பெறப்பட்டதாக சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு அதனை கொண்டு வந்துள்ளனர். இதனால் இணையதளத்தில் தல தளபதி ரசிகர்கள் இடையே பெரும் சண்டை ஏற்பட்டுள்ளது.
என்னதான் இருந்தாலும் வெறித்தனம் லிரிகல் வீடியோவிற்கு மக்களின் ஆதரவு ரசிகர்களின் ஆதரவு உலக அளவில் இருப்பதால் இந்த வெற்றியை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.