Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

vijay-stalin-meet-www.indiastarsnow.com

விஜயின் அரசியல் எண்ட்ரி

Posted on September 5, 2019September 5, 2019 By admin No Comments on விஜயின் அரசியல் எண்ட்ரி

நடிகர் விஜய் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தாலும், அவ்வபோது தனது அரசியல் ஆர்வத்தையும் வெளிப்படுத்த தவறியதில்லை. அவரது விஜய் மக்கள் இயக்கம் மூலம் ஏழை எளிய மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்து வருவதோடு, ஜல்லிக்கட்டு போராட்டம் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகளுக்கு தனது ஆதரவை தெரிவித்தும், அது குறித்து கருத்து தெரிவித்தும் வருகிறார்.
விஜயின் அரசியல் எண்ட்ரி

ஆனால், இதுவரை விஜய் வெளிப்படையாக தான் அரசியலில் ஈடுபடப்போகிறேன், என்று சொன்னதில்லை. இருந்தாலும், அவர் அரசியலில் நுழைவதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை செய்து வருகிறார் என்றும், அதற்காகவே தனது ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சமீபத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்ற விஜய், அங்கு வந்திருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து சில நிமிடங்கள் பேசியிருக்கிறார். ஸ்டாலின், விஜய் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வரும் நிலையில், விஜய் திமுக-வில் இணைய போவதாகவும், அவர் விரைவில் நேரடி அரசியலில் ஈபடப்போவதாகவும் சமூக வலைதளங்களில் பலர் தகவல் பரப்பி வருகிறார்கள்.

இந்த நிலையில், விஜயின் அரசியல் எண்ட்ரி மற்றும் அவர் திமுக-வுடன் சேருவது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், “விஜய் அரசியலுக்கு வந்தாலும் சரி, அவர் திமுக-வுடன் கூட்டணி வைத்தாலும் சரி, அதிமுக-வுக்கு எந்த ஆபத்தும் வராது. வர இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அதிமுக தான் ஆட்சியை கைப்பற்றும், என்று தெரிவித்துள்ளார்.

Cinema News, Political News Tags:vijay-stalin-www.indiastarsnow.com, விஜயின் அரசியல் எண்ட்ரி

Post navigation

Previous Post: ஓட்டல் சப்ளையரான பிரபல நடிகர்
Next Post: காதல் தேசம் படத்தின் நடிகை தபு சமீபத்தில் போட்டோ ஷூட்

Related Posts

Actor Munishkanth starrer “Middle Class” shooting commences Actor Munishkanth starrer “Middle Class” shooting commences Cinema News
மான் வேட்டை திரைப்பட இசை வெளியீட்டு விழா மான் வேட்டை திரைப்பட இசை வெளியீட்டு விழா Cinema News
சந்தேஷ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வினு வெங்கடேஷ் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் ‘வுல்ஃப்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது Cinema News
தலைவி ரிலீஸ் தள்ளிவைப்பு-indiastarsnow.com தலைவி ரிலீஸ் தள்ளிவைப்பு Cinema News
ரசிகர்களுக்கு ‘இரட்டை’ விருந்தளிக்கும் ஸ்ருதிஹாசன் Cinema News
ஸ்ரீநிதி ஆர்ட்ஸ் தயாரிப்பில் எம் ஜெ ரமணன் இயக்கத்தில் துஷ்யந்த், விவேக் ரீநிதி ஆர்ட்ஸ் தயாரிப்பில் எம் ஜெ ரமணன் இயக்கத்தில் துஷ்யந்த், விவேக் பிரசன்னா நடிப்பில் உருவாகும் நகைச்சுவை ததும்பும் படம் ஷூட்டிங் ஸ்டார் Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme