டெல்லி:
எனக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் நான் எந்த ஆதாரத்தை கலைத்து விட போகிறேன் என முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த 15 நாட்களாக சிபிஐ காவலில் இருந்து வருகிறார். இந்த நிலையில் சிபிஐ காவலுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஓ.பி ஷைனி இன்றுவரை ப.சிதம்பரம் சிபிஐ காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இன்று சிபிஐ காவல் முடிவடைந்த நிலையில் ப.சிதம்பரம் 6-ஆவது முறையாக சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிபிஐ தரப்போ, சிதம்பரத்துக்கு ஜாமீன் கொடுக்கக் கூடாது. அவருக்கு ஜாமீன் கொடுத்தால் வழக்கின் போக்கை சிதைத்துவிடுவார்.
எனவே ப.சிதம்பரத்தை நீதிமன்றக் காவலில் வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது. ஆனால் ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல் கூறுகையில், ப.சிதம்பரம் ஏற்கெனவே 15 நாட்கள் சிபிஐ காவலில் இருந்து வழக்கு தொடர்பாக தனக்கு தெரிந்த தகவல்களை தெரிவித்துவிட்டார்.
ப.சி. அப்போது பேசியது நல்ல வாயா?.. இப்போது பேசுவது வேற வாயா?.. எச் ராஜா கலாய்
இந்த நிலையில் அவரை நீதிமன்றக் காவலில் வைக்க முகாந்திரம் இல்லை. சிதம்பரத்தின் வயதை கருத்தில் கொள்ளுங்கள். அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் அவர் எந்த ஆதாரத்தை அழித்து விட போகிறார்.
ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத் துறை காவலுக்கு செல்ல தயாராக இருக்கிறார். ஆனால் அவரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப வேண்டாம் என்றார் கபில் சிபல்.
“ப.சிதம்பரத்தை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் அனுப்புங்கள். வழக்கு தொடர்பான தகவல்கள் சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் உள்ளன என்று சிபிஐ வழக்கறிஞர் துஷார் மேத்தா தெரிவித்தார்.
கபில் சிபல் வாதம்: ப.சிதம்பரத்தை விடுவிக்கக் கோரி வாதிடுகிறேன். ஜாமீன் கோரி வாதிடவில்லை. அவரை விடுவிப்பது குறித்து நீதிமன்றமே முடிவு செய்யும் என்றார்.