விஷ்ணு விஷால் நடிக்கும் ‘எப்.ஐ.ஆர்’ படத்தின் அப்டேட்
அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில், நடிகர் விஷ்ணு விஷால் ‘எப்.ஐ.ஆர்’ என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இந்த படத்தில் நாயகிகளாக மஞ்சிமா மோகன், ரைஸா வில்சன் மற்றும் ரெபா மோனிகா ஜான் ஆகியோர் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அதிரடி திகில் திரைப்படமாக உருவாகி வரும் இதில் விஷ்ணு விஷால் இஸ்லாமிய இளைஞனாக நடித்து வருகிறார்.