ஷங்கரின் அசோசியேட் இயக்குனராக பணியாற்றிய விஜய் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் டக்கால்டி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஃபர்ஸ்ட் லுக்கில் சிகரெட் புகைப்பது போன்ற போஸ் இடம்பெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் பின் சந்தானம் ட்விட்டரில் இதற்காக வருத்தம் தெரிவித்தார்.
இதுபோல வேறு எந்த படத்திலும் செய்யமாட்டேன் என்றும் வாக்குறுதி கொடுத்துள்ளார்.ட்விட்டரில் ட்ரெண்டாக்கி கொண்டாடுகின்றனர். அதேபோல யுவனின் பிறந்தநாளையும் அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் சந்தானம் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கார்த்திக் யோகி இயக்கும் புதிய படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் பேக்டரி நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறார்கள். இதன் டைட்டில் லுக் போஸ்டர் வரும் செப்டம்பர் 5ம் தேதி வெளியிட இருக்கிறார்கள்.