Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

சோஹன் ராயின் சி.எஸ்.ஆர்ன் கானல் நீர் திரைப்படம் வரும் செப்டம்பர் 13ல் வெளியாகிறது

Posted on September 1, 2019 By admin No Comments on சோஹன் ராயின் சி.எஸ்.ஆர்ன் கானல் நீர் திரைப்படம் வரும் செப்டம்பர் 13ல் வெளியாகிறது

இயக்குனர் எம்.பிரேம்குமாரின் சி.எஸ்.ஆர் திரைப்படமான கானல் நீர் தமிழகத்தில் செப்டம்பர் 13 ம் தேதி வெளியாகிறது.

ஒரு பரபரப்பான நகரின் மத்தியில் வாழும், வீடில்லாத பெண் மற்றும் அவரது குழந்தையின் போராட்டமான வாழ்க்கையை சித்தரிக்கும் இந்த திரைப்படம் ஏற்கனவே சமூகத்தின் அனைத்து தரப்பைச்சேர்ந்த முன்னணி மனிதர்களை கவர்ந்திருக்கிறது.

திரைப்படத்தின் நாயகியாக பிரியங்கா நாயர் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரம் காலை ஹரீஷ் பெரேடி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். டி.எஸ்.சுரேஷ் பாபு திரைக்கதை எழுதியிருக்கிறார். சோகன் ராய், தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படம் சி.எஸ்.ஆர் ( நிறுவன சமூக பொறுப்புணர்வு) பிரிவில் தயாரிக்கப்பட்டுள்ள உலகின் முதல் நன்கொடை திரைப்படமாகும் . இந்த திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான சிறந்த திரைப்படம் பிரிவில் நாமினேஷனுக்கு போட்டியிடுகிறது.

இந்த திரைப்படத்தின் மூலம் கிடைகும் லாபம் அனைத்தும் நிலமில்லாதவகள் மறுவாழ்வுக்கு மற்றும் பெண்கள் அதிகாரமளிக்கும் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும். இந்த இரண்டு கருப்பொருள்களும் திரைப்படத்தில் பிரதானமாக கையாளப்பட்டுள்லது. கேரள மாநிலம் கொச்சியில் பாலம் ஒன்றின் கீழ் வசிக்க நேர்ந்த குடும்பம் பற்றி பிரபல நாளிதழில் வெளியான செய்திக்கட்டுரையை அடிப்படையாக கொண்டு கானல்நீர் படம் அமைந்துள்ளது. பெரும்பாலான நிலமில்லாதவர்கள், தங்கள் குடும்ப பெண்களை பாலியல் தாக்குதலில் இருந்து காப்பதற்கான பாதுகாப்பான இடத்தை தேடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

பெரும்பாலும் அதிகாரவர்கத்தால் அலட்சியம் செய்ப்படும், நில உரிமை போராட்டம் பற்றியும் திரைப்படம் பேசுகிறது. இந்தியா அதிகாரவர்கத்தின் மந்தமான தன்மை மற்றும் உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவாமல் இருக்கும் அதிகாரவர்த்தின் தன்மை பற்றியும் கானல் நீர் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

முக்கியமாக கானல் நீர், ஒரு குறிக்கோள் கொண்டிருக்கிறது. இந்த திரைப்படம் பல்வேறு சர்வதேச மற்றும் தேசிய திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பரவலான பாராட்டுகளை பெற்றுள்ளது. கலை, நேர்த்தி மற்றும் சிறந்த நடிப்பு ஆகிய அம்சங்களை கொண்டுள்ள படமாக விளங்குகிறது.

Cinema News Tags:சோஹன் ராயின் சி.எஸ்.ஆர்ன் கானல் நீர் திரைப்படம் வரும் செப்டம்பர் 13ல் வெளியாகிறது

Post navigation

Previous Post: ஆர்யாவின் மாகமுனி வரும் வெள்ளிகிழமை வெளியாகிறது
Next Post: AishwaryaRajesh looks graceful in these beautiful pictures

Related Posts

வாஸ்கோடகாமா’ திரைப்படம் வாஸ்கோடகாமா திரைப்படம் இனிதே பூஜையுடன் துவங்கியது படப்பிடிப்பு Cinema News
உதயநிதி ஸ்டாலின் மேகா ஆகாஷைக் பிசியாக நடித்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின் மேகா ஆகாஷைக் பிசியாக நடித்து வருகிறார் Cinema News
ம.பொ.சி. அவர்களின் படமல்ல ஆனால், அவரைப் போற்றக்கூடிய படமாக இருக்கும் – இயக்குனர் போஸ் வெங்கட் ம.பொ.சி. அவர்களின் படமல்ல ஆனால், அவரைப் போற்றக்கூடிய படமாக இருக்கும் – இயக்குனர் போஸ் வெங்கட் Cinema News
மாயோன் திரைப்படம் பார்வையற்றவர்களுக்காக சிறப்பு காட்சி‌! மாயோன் திரைப்படம் பார்வையற்றவர்களுக்காக சிறப்பு காட்சி‌! Cinema News
amy jackson boy baby-indiastarsnow.com நடிகை எமி ஜாக்‌ஷனுக்கு இன்று சற்று முன்னர் ஆண் குழந்தை பிறந்துள்ளது Cinema News
Vijayanand Movie Review Vijayanand Movie Review Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme