கலையரசன் மெட்ராஸ் படத்தில் கார்த்திக்குடன் இணைந்து மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவர். இவர் நந்தலாலா என்ற தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானார்,அதன்பின் இவர் சில வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.
அந்த வரிசையில் பார்க்கும் போது முகமூடி, அட்டகத்தி, தானா சேர்ந்த கூட்டம், கபாலி,ஐரா ஆகிய படங்கள் அடங்கும். தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகியிருக்கும் கலையரசன் சினிமா உலகில் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்குவார்.
அடுத்து இவர் நடித்துக் கொண்டிருக்கும் படம்தான் சின்னா, டைட்டானிக், முகம் ஆகிய வரிசை கட்டி உள்ளது. இவர் கோட் சூட் போட்டு முறுக்கு மீசையுடன் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.