அஜித்தின் ரசிகர்களாக இருப்பவர்களிடம் உங்களுக்கு பிடித்த இசை கலைஞர் யார் என்று கேட்டால் சற்றும் யோசிக்காமல் யுவன் என்று சொல்லுவார்கள். இதுபோல பல ஹீரோக்களை பிடித்திருந்தாலும் யுவனுக்கு என்று ரசிகர் மன்றம் வைக்கும் அளவிற்கு ரசிகர் கூட்டம் உண்டு.
யுவனின் ரசிகர்களுக்கு இன்று இரு கொண்டாட்டம் என்றே சொல்லலாம். ஆமாம், யுவனின் பிறந்தநாளான இதே தேதியில்தான் அஜித் யுவன் கூட்டணியில் கடந்த 2011ஆம் ஆண்டு மங்காத்தா என்ற மாஸ் ஹிட் படம் வெளியானது. இதில் யுவனின் தீம் மியூசிக் இன்றுவரை பலரது ஃபேவரைட்.