Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

மூட்டு வலி மூட்டு தேய்மானம்

Posted on August 31, 2019August 31, 2019 By admin No Comments on மூட்டு வலி மூட்டு தேய்மானம்

மூட்டு வலி மூட்டு தேய்மானம்

மூட்டு வலி வரக் காரணம் மூட்டு தேய்மானமே. இந்தப் பிரச்சினை இல்லாத இடமே உலகத்தில் இல்லை. அப்படிப்பட்ட மூட்டு வலி வரக் காரணம் நாம் காலைக்கடன் கழிக்கும் முறையே என்கிறது மருத்துவம். அதனால்தான் நம் நாட்டில் கால் முட்டியிலும் வெளிநாட்டவருக்கு இடுப்பு மூட்டிலும் இந்த மூட்டு தேய்மானம் வருகிறது.

மூட்டுத் தேய்மானம் இரண்டு வகைப்படும்:

1)மூட்டழற்சி (osteo arthritis):-

இது பெரும்பாலும் வயதானவர்களுக்கே வரும் இது பொதுவாக இடுப்பு மூட்டு, கால் மூட்டு, தோள்பட்டை, கழுத்து போன்ற பகுதிகளில் ஏற்படும்.

2)முடக்குவாதம்(rheumatoid arthritis):

இது எந்த வயதினருக்கும் வரலாம். பெரும்பாலும் விரல்கள்,மணிக்கட்டு,கால் போன்ற பகுதிகளையே தாக்கும்.

அறிகுறிகள்:

மூட்டழற்சி:

நாள்பட்ட வலி, மூட்டு இறுக்கம், நடந்த பிறகோ வேலை செய்த பிறகோ வலி அதிகமாகும்.

முடக்குவாதம்:

இது ஆரம்பத்தில் தெரியாது நாள்பட்ட வலி மற்றும் பலமூட்டுகளில் வலி போன்றவை ஏற்படும். மொத்த உடம்பும் பாதிக்கப்பட்டிருக்கும். மேலும் இரத்தசோகை, குடல் அழற்சி, மலச்சிக்கல், தோற்றம் மாறிய கை மற்றும் பாதம் போன்றவை காணப்படும்.

காரணம்:

முக்கிய காரணம் அதிக பளு தூக்குதலால் மூட்டின் உள் பகுதியில் ஏற்படும் மாற்றம்.

முடக்குவாதம் சில கிருமிகளினாலும், ஹார்மோன் எனப்படும் நாளமில்லா சுரப்பிகளின் ஒழுங்கற்ற பணியாலும் ஏற்படுகிறது. மேலும் மன அழுத்தம், சீரற்ற மனநிலை, நோய்த்தொற்று, அடிபடுதல் போன்றவையும் காரணமாகும். பரம்பரை ரீதியாகவும் மூட்டுத்தேய்மானம் ஏற்படலாம்.

கைவைத்தியம்:

1. நல்ல நடுத்தரமான உருளைக்கிழங்கு ஒன்றை மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுதும் ஊறவைத்து பின் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். புதிதான உருளைகிழங்கு சாறையும் அருந்தலாம். இது மூட்டு வலிக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.

2.ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால் கோப்பை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

3.இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் பிழிந்து தினம் இருமுறை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

4. வெதுவெதுப்பான தேங்காய் அல்லது கடு எண்ணெயில் சிறிது கற்பூரத்தை போட்டு நன்கு மூட்டில் தேய்த்தால் வலி குறையும். இது மூட்டுவலிக்கு உடனடி தீர்வாகும்.

5.ஒரு தேக்கரண்டி குதிரைமசால்(இது ஒரு கால் நடை தீவனம்) விதைகளை ஒரு கோப்பை நீரில் கொதிக்க வைத்து தேநீர் போல ஒரு நாளைக்கு மூன்று-நான்கு முறை அருந்தலாம்.

6.இது ஒரு ஸ்பெயின் மருத்துவரின் குறிப்பு, மேலும் நல்ல பலனை தரும். இரண்டு மேஜைக்கரண்டி விளக்கெண்ணையை அடுப்பில் சூடேற்றி ஒரு கோப்பை ஆரஞ்சு சாற்றில் விட்டு காலையில் உணவிற்கு முன் சாப்பிட வேண்டும். இதை நோய் தீரும் வரை செய்ய வேண்டும். மூன்று வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். பிறகு மூன்று வாரங்கள் விட்டு விட வேண்டும். மீண்டும் மூன்று வாரங்கள் செய்ய வேண்டும். இந்த மருந்தை சாப்பிடும் போது நாம் காரமான உணவு வகைகளை அதிகம் எடுத்துக் கொண்டு புளிப்பான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் மருந்து பலன் தராது.

7.ஒரு மேஜைக்கரண்டி பச்சை அல்லது பாசிப்பருப்பை இரண்டு பூண்டு பற்களுடன் வேகவைத்து சூப்பாக நாளொன்றுக்கு இருமுறை சாப்பிட வேண்டும்.

உணவுப்பழக்கம்:

* வாழைப்பழம் அதிகமாக உண்ண வேண்டும்.

காய்கறி சூப் அதிகமாக சாப்பிட வேண்டும். கேரட், பீட்ரூட் போன்றவற்றை பச்சையாக சாப்பிடலாம்.

* கால்சியம் அதிகம் உள்ள பால்,பால் சார்ந்த பொருட்கள், முள் நிறைந்த மீன் போன்றவற்றை சாப்பிட வேண்டும்

தவிர்க்கவேண்டியவை:

காரமான வறுத்த உணவுகள், தேநீர், காபி, பகல் தூக்கம், மனக்கவலைகள், மன அழுத்தம்.

தினசரி வாழ்க்கையில் நீங்கள் காலை எழுந்திருக்கும்போது முழங்காலை மடக்க முடியாமல் போய்விடுகிறதா? கால்தாங்கலாகத் தான் நடக்கவேண்டியிருக்கிறதா? கடந்த காலத்தில் இப்பிரச்னை வந்து, தீர்ந்து தீர்த்து தற்போது உறக்கத்தில் யாரோ அழுத்துவது போன்ற உணர்வு வருகிறதா? நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது பாம்ஸ் (balm) மற்றும் தைலம், பாப்பிங் பில்ஸ் ஆகியவை உபயோகிக்கும்போது மட்டும் வலியிலிருந்து நிவாரணம் பெறுகிறீர்களா? அனேகமாக நீங்கள் ‘ஆர்திரிடிஸ்’ மூலம் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

பருவக் கால மாற்றங்கள் நம் உடலில் சில குறிப்பிடும்படியான மாற்றங்களை ஏற்படுத்தும். குறிப்பாக மழைக்காலம் வந்தாலே பல்வேறு நோய்த் தொல்லைகள் வந்துவிடும். மரத்துப்போன மூட்டு இணைப்பில் நடுக்கத்துடன் கால்தாங்கலாக நடக்க வேண்டிய நிலையும் மழைக்காலத்தில் வரும் மோசமான உடல் பாதிப்பாகும்.

சரி, ஆர்திரிடிஸ் என்றால் என்ன?

அறிவியலின்படி ‘ஆர்திரிடிஸ்’ என்பது (ஆர்த் : இணைப்புகள் ஐடிஸ் :வீக்கம்) முழங்கால் மூட்டில் ஏற்படும் வீக்கமாகும். முழங்கால் அழற்சி மூலம் வலி, முழங்கால் மடக்க முடியாமை மற்றும் வீக்கம் ஆகியவை முழங்கால் மூட்டில் உண்டாகிறது.

இன்றைய நிலையில் 100_க்கும் அதிகமான ‘ஆர்திரிடிஸ்’ நோய் வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. பொதுவாக ‘ஆர்திரிடிஸ்’ இரண்டு வகையாக கீழ்க்கண்டவாறு பிரிக்கப்படுகிறது.

1. ரியூ மேட்டாய்டு ஆர்திரிடிஸ் :

உடலில் இரத்த வெள்ளையணுக்கள் நோய் எதிர்ப்பு சக்திக்கு அரணாக இருக்கின்றன. நோய் எதிர்ப்பு செல்கள், நீண்ட நேரம் உடல் செல்களுக்கும் தீங்கிழைக்கும் மற்ற பொருள்களுக்குமிடையேயான வேறுபாட்டை அறிவதில்லை. இதனால் அவை உடல் செல்களை தாக்க ஆரம்பிக்கின்றன. முழங்கால் மூட்டிலுள்ள சவ்வு இதனால் வீக்கமடைந்து விறைப்பு தன்மை அடைந்து சிவப்பாக மாறும் இவற்றுடன் மூட்டு வலியும் ஏற்படுகிறது. மோசமான நோய் பாதிப்பினால் சில நேரங்களில் மூட்டுகள் செயலிழந்து விடுகின்றன. இந்நேரத்தில் இந்நோய் ஒன்றுக்கு மேற்பட்ட மூட்டுகளைப் பாதிக்கிறது. பெரும்பாலும் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு இந்நோய் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது.

2. ஆஸ்டியோ ஆர்திரிடிஸ் :

இது பொதுவாக மற்றொரு வகை ஆர்திரிடிஸ் நோயாகும். இந்நோய் மேலும் வளரக்கூடியது அல்ல. உடல் எடை அதிகமாகி முழங்கால் மூலமாக அதிக எடையை தாங்கும்போது இந்நோய் முக்கியமாக வருகிறது. நன்கு உறுதியான மேற்புறமுள்ள இணக்கமான சவ்வு (முழங்கால் மூட்டு இணைப்பின் மீது மிருதுவாக இந்த திசு இருக்கிறது) கிழிந்து விடுதல் மற்றும் நீங்கிவிடுவதன் மூலமாக எலும்புகள் சொரசொரப்புடன் ஒன்றுடன் ஒன்று நேரிடையாக உராய்வதால் வலி மற்றும் வீக்கம் ஆகியவை ஏற்படுகிறது. சாதாணமாக மக்கள் ஆஸ்டியோ ஆர்திரிடிஸ் நோயினால் பாதிக்கப்படுவதால் மூட்டு வலி ஏற்பட்டு, அதிகமாக அசைக்க முடியாத நிலை ஏற்படும். இந்த ஆர்திரிடிஸ் நோய், ரியூமேட்டாய்டு ஆர்திரிடிஸ் போன்று உடலின் உட்புற பாகங்களை பாதிப்பதில்லை. மூட்டுகளை மட்டுமே பாதிக்கிறது.

மூட்டு வலி :ற காரணங்கள்

கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட காரணங்களால் மூட்டு வலி ஏற்படலாம்.

1-உங்களுடைய உடலுக்கு சேராத உணவுகளை சாப்பிடும்போது.

2-அதிக குளிர்ச்சி மற்றும் வெப்பமான கால சூழலில் இருத்தல்.

3-அதிக உடல் உழைப்பு, உடற்பயிற்சி மற்றும் எவ்வித உடற்பயிற்சியும் இல்லாமை ஆகியவை மூலமாக தேவையில்லாத சிரமம்.

4-குறிப்பிட்ட காலத்தில் மூட்டு இணைப்பு சவ்வு வளராமை மற்றும்

சாதாரணமாக முழங்கால் மூட்டுகள் மீது போர்த்தப்படாமை.

5-வழக்கத்திற்கு மாறாக அதிக உடல் எடை அதிகரிப்பு.

6-சமீபத்திய மோசமான உடல் பாதிப்பு மற்றும் நீண்ட நாள் நோய்வாய்பட்டிருத்தல்.

7-ஏதாவதொரு எலும்பு மூட்டு தசையில் இரத்தம் உறைந்து விடுதல்.

8-ஏதாவதொரு மூட்டு இணைப்பு சவ்வினில் வீக்எலும்பு மூட்டின் மேற்பகுதியில் சவ்வுப் பகுதி நன்கு மூடப்படா மூட்டு வீக்கம், கீல்வாதம் போன்ற நாள் பட்ட நோய்கள்.

ஆயுஷ் ஆயுர்வேதிக் அறிவியல் மையத்தின் அறிவியலறிஞரும் மருத்துவருமாகிய விஸி பன்சால் ஆயுர் வேத சிகிச்சை வழிமுறை மூலம் இந்நோயை நீக்க முடியும் என்கிறார்.

‘‘ஒருவர் தன்னுடைய வாதம், பித்தம் மற்றும் கபம் ஆகிய தோச காரணிகளை நடுநிலையுடன் வைப்பதன் மூலம் உடல் ஆரோக்கியத்தைப் பேணலாம். உடலிலுள்ள ஒவ்வொரு உறுப்பிலும் திசு மற்றும் செல்லிலும் கூட இம்மூன்று தோசக் காரணிகள் இருக்கின்றன. இல்லையேல் இக்காரணிகளே பல்வேறு நோய்கள் ஏற்பட வழிவகுத்துவிடும்’’ என்றார்.

அதிக நடை, நீண்ட தூரம் பயணம் செய்தல், அளவுக்கு அதிகமான உடற்பயிற்சி, போதுமான உறக்கமின்மை, குளிர், அதிகமான காற்று, வெப்பமான பகுதிகளில் இருத்தல் ஆகியவற்றின் மூலம் உணவு நன்கு செரிக்கப்படாமல் ‘ஆமா’ என்கிற தேவையற்ற (செரிக்கப்படாத பொருள்) பொருள் உடலில் சேருவதன் வாயிலாக வாதம் அதிகமாகி தலைக்குச் செல்கிறது. உடலில் வாதம் செல்லும்போது கூடவே ஆமா பொருளை மூட்டுகளில் விட்டுச் செல்கிறது. எலும்பு மூட்டு இணைப்புகளில் இவை தங்கி விடுவதால் கால் அசைவின்போது வலி ஏற்படுகிறது. இந்நோய்க்கு ஆமவாதா அல்லது ரிகியூ மேட்டாய்டு ஆர்திரிடிஸ் என்று பெயர்.

மற்றொரு வழிமுறையாக மூட்டு இணைப்புகளில் வாதம் அதிகரிக்கும் போது ஆஸ்டியோ ஆர்திரிடிஸ் நோய் வருகிறது. ஆயுர்வேத அறிவியலின்படி இதற்கு சாந்திவாதா என்று பெயர். அதிகமான குளிர், காற்று, வெப்பமான இடங்களில் இருத்தல், அதிக நடை, நீண்ட தூரம் பயணம் மேற்கொள்வது, போதுமான உறக்கமின்மை, இவைபோலவே உலர்ந்த, மிருது தன்மையற்ற, நுண்ணூட்டமில்லாத உணவுப் பொருள்களை சாப்பிடுதல் ஆகிய காரணங்களால் வாதம் அதிகரிக்கிறது. அதிக நாடி துடிப்பு வாதத்தை நடுநிலையில் வைப்பதில்லை.

இராசயன வலி நிவாரணப் பொருள்கள், களிம்பு, தைலம், பாம்ஸ் ஆகியவை தற்காலிகமாக வலியிலிருந்து நிவாரணமளிக்கிறது. அல்லது வலியை அதிகரிக்கிறது. ஆனால் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை ‘ஆர்திரிடிஸ்’ தோன்றுவதற்கான மூலக் காரணிகளை அழிக்கிறது.

ரியூ மேட்டாய்டு மற்றும் ஆஸ்டியோ ஆர்திரிடிஸ் ஆகிய இரண்டு நோய்களும் சாதாரணமாக ஒருவருக்கு வரும்போது மற்ற வைத்தியத்தில் ஒரே மாதிரியான சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் ஆயுர்வேதிக் வழிமுறையில் வெவ்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

செரிமான திறனை அதிகரிப்பதன் மூலம் ‘ஆமா’ பொருள் உருவாவது தடுக்கப்பட்டு, ரியூ மேட்டாய்டு ஆர்திரிடிஸ் நோய் நீக்கப்படுகிறது. இதைப்போலவே வாதத்தைக் குறைப்பதன் மூலம் ஆஸ்டியோ ஆர்திரிடிஸ் நோயைக் குணப்படுத்தலாம். எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யும்போது ஆஸ்டியோ ஆர்திரிடிஸ் நோயிலிருந்து அதிக நிவாரணம் பெறலாம். ஆனால் ரியூ மேட்டாய்டு ஆர்திரிடிஸ் நோய்க்கு மசாஜ் மேற்கொண்டால் பாதிப்பு இன்னும் அதிகரிக்கும். ஆகையால் எவருக்கேனும் மூட்டு வலி ஏற்பட்டால் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொள்வதற்கு முன்பு தகுந்த ஆயுர்வேத மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியமாகும்.

அறிகுறிகள் : இவ்விரு மூட்டு நோய்களையும் சாதாரணமாக வரும் வலியை வைத்து கண்டறியலாம். காலையில் விழிக்கும்போது அதிக வலியுடன் வெதுவெதுப்பு தன்மை உடலிலிருந்தால் அதை ரியூ மேட்டாய்டு நோய் அறிகுறி என அறியலாம். முக்கியமாக குளிர்காலங்களில் உடற்பயிற்சி மற்றும் நடக்கும்போது அதிக வலி ஏற்பட்டால் அது ஆஸ்டியோ ஆர்திரிடிஸ் நோய் அறிகுறியாகும்.

ரியூமேட்டாய்டு ஆர்த்தரடிஸ் நோயை கட்டுப்பாட்டில் வைக்க உதவும் வழிகள்:

1-வேகமாக நடத்தல், ஒத்தடம் கொடுத்தல், பசியை தூண்டுதல் மற்றும் கசப்பு தன்மை கொண்ட உணவுகளைச் சாப்பிடுதல், லேசாக பேதி உண்டாக்குதல் மற்றும் உட்புறமாக எண்ணெய் எடுத்துக் கொள்தல் ஆகியவற்றின் மூலமாக வாதத்தை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.

2-இலகுவான உணவினை உட்கொண்டபின் வேகமாக நடப்பதன் மூலம் எளிதில் ஜீரணமடைந்து ‘ஆமா’ உருவாவதை தவிர்க்கலாம்.

3-சூடான சோறு அல்லது சூடான நீரை ஒரு பையில் நிரப்பி வெதுவெதுப்பான சூடு மூலமாக ஒத்தடம் கொடுக்க வேண்டும். ஒத்தடம் கொடுப்பது வாதத்தைக் குறைக்கிறது. மேலும் வெதுவெதுப்பான சூடு ஆமாவை கரைக்க உதவுகிறது.

4-பசி உணர்வை தூண்டுதல் மற்றும் கசப்புடன் கூடிய கார உணவுகளைச் சாப்பிடுவதன் மூலம் செரிமான சக்தியை அதிகரிக்கலாம்.

5-உட்புறமாக எண்ணெய் எடுத்து கொள்வதன் மூலம் அதிக வாதம் குறைக்கப்படுகிறது. உயவுத்தன்மை மூலம் உணவு வழிப்பாதையில் வாயு தொல்லையை நீக்குகிறது. மேலும் வாதத்தை கீழ்நிலைக்குக் கொண்டு வருகிறது.

வலியைக் குறைக்க உதவும் வழிகள்:

1-தினமும் காலையில் ஆமணக்கு எண்ணெய் கொண்டு தயாரிக்கப்பட்ட ரோஸ்ட் 50 கராடி மீது கல் உப்பை தூவி ஒன்று மட்டும் சாப்பிட வேண்டும். கராடி பசி உணர்வைத் தூண்டுவதோடு ஆமாவை செரிக்க உதவுகிறது. ஆமணக்கு எண்ணெய் உயவு தன்மைக் கொண்டிருப்பதால் உணவு மண்டலத்திலுள்ள அசுத்தப் பொருள்களை நீக்குகிறது.

2-அஜ்வெய்ன் மற்றும் உலர்ந்த இஞ்சி பவுடர் (ஒரு மேசை கரண்டி) சமமாக சேர்த்து தயாரிக்கப்பட்ட கராடியுடன் மோர் சேர்த்துக் சாப்பிடுதல் அல்லது அதிகமாக சுடு தண்ணீரை குடித்தல் ஆகியவை செரிமான சக்தியை அதிகரிப்பதோடு, மூட்டு இணைப்புகளிலுள்ள வீக்கத்தைக் குறைக்கிறது.

சுடு தண்ணீரில் 2 கிராம் உலர்ந்த இஞ்சியை கலந்து குடித்தல் மற்றும் மோர் உட்கொள்ளுதல் கபம் மற்றும் வாதத்தைக் குறைக்கும். இது செரிமான சக்தியை அதிகரிக்க உதவுவதோடு, மூட்டு இணைப்புகளின் வீக்கத்தைக் குறைக்கிறது.

3-தண்ணீர் பாதியளவு குறையும்வரை சூடுபடுத்தி வெதுவெதுப்பாக குடிப்பதால் ‘ஆமாவை’ செரிக்க வைக்க உதவுகிறது.

4-சுரைக்காய் போன்று கொடியில் காய்க்கும் கசப்பு காய்கள், வாடாமல்லிகை இலைகள், வேப்பிலைகள், பாகற்காய், கோதுமையில் தயாரிக்கப்பட்ட சப்பாத்தியுடன் பார்லி சேர்த்த உணவு பொருள், ஸ்டார்ச் நீக்கப்பட்ட அரிசி சோறு, கொள்ளு, மூங், பியஸ் ஆகியவை உணவு பொருள்களில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

5-பால், தயிர், பன்னீர், பாலாடையுடன் கூடிய கரும்புச் சாறு குறிப்பாக வெல்லம், சர்க்கரை, பருப்பு, மீன் மற்றும் நறுமணப் பொருள் கொண்ட பொருள்களை உட்கொள்ள வேண்டும்.

6-தினமும் உடற்பயிற்சி (வாரத்தில் 4 நாள்களுக்கு 30_லிருந்து 40 நிமிடம் வரை நடக்க வேண்டும்) செய்தல் அவசியம்.

7-தினசரி வாழ்க்கையில் யோகா மேற்கொள்ள வேண்டும்.

ஆஸ்டியோ ஆர்திரிடிஸ் (சாந்திவாதா) கட்டுப்பாட்டில் வைத்தல் :

1-உயவு தன்மை கொண்ட எண்ணெய்ப் பொருள்களை உட்கொள்ளுதல், ஒத்தடம் கொடுத்தல் மற்றும் வாதத்தைக் குறைக்கும் உணவுப் பொருள்களை உட்கொள்ளுதல் ஆகியவற்றின் மூலமாக ஆஸ்டியோ ஆர்திரிடிஸ் நோயைக் கட்டுப்பாட்டில் வைக்கலாம்.

2-எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வதன் மூலம் உடலில் உயவுத் தன்மையை ஏற்படுத்தலாம். எள் எண்ணெய், விளக்கெண்ணெய், கடுகு எண்ணெய் அல்லது மகாநாராயண தைலா போன்ற மருத்துவ எண்ணெய் ஆகியவைகளைக் கொண்டு மசாஜ் செய்யலாம். எலும்பு மூட்டு இணைப்பு பகுதியில் வீக்கமடைந்த பகுதியை குளிர்காற்றில்
நேரிடையாக படாதவாறு துணி அல்லது பான்டேஜ் மூலமாக மறைக்க வேண்டும்.

3-எண்ணெய் உபயோகித்த பிறகு நீராவியுடன் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

4-தீவிர உணவு கட்டுப்பாட்டின் மூலம் வாதத்தை கட்டுப்பாட்டில் வைக்க முடியும்.

5-ஒரு மேசை கரண்டி டில் ஆயில், ஒரு மேசை கரண்டி மாட்டு நெய், அரை மேசை கரண்டி இஞ்சி சாறு, அரை மேசை கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு கரும்பு சாறு ஆகியவை சேர்ந்த கலவை வாதத்தைக் குறைக்க உதவுவதோடு, எலும்பு மூட்டு இணைப்பில் வீக்கத்தையும் குறைக்கிறது.

6-இதற்கு மாற்றாக வெதுவெதுப்பான பாலுடன் ஒரு மேசை கரண்டி விளக்கெண்ணெய் கலந்து இரவில் குடிப்பதால் அதிக செரிமானத்தையும், வாதத்தை குறைக்கலாம்.

7-5 கிராம் இஞ்சி கூழுடன் கூடிய ரோஸ்ட், சீரகம், கல் உப்பு, கருப்பு உப்பு, உலர்ந்த இஞ்சி பவுடர் மற்றும் கருப்பு மிளகு ஆகியவற்றை வெண்ணெயுடன் சேர்த்து உட்கொள்வதால் மூட்டு வலி மற்றும் முதுகு வலி ஆகியவற்றை வெகுவாகக் குறைக்கிறது.

8-போதுமான நெய் அல்லது எண்ணெய் சேர்த்து உணவு சமைக்கப்படவேண்டும். பால், சோறு, மட்டன் சூப் மற்றும் இனிப்பு, புளிப்பு அல்லது உப்பு நிறைந்த சத்தான உணவுப் பொருள்களை உட்கொள்ள வேண்டும்.

உடலில் எவ்வித வலியும் இல்லாமல் நிம்மதியாக ஆரோக்கியத்துடன் வாழ ஆயுர்வேத சிகிச்சை உங்களுக்கு உதவியாக இருக்கிறது. இச்சிறிய குறிப்புகளை மேற்கொண்டு வாழ்க்கை முறையை மாற்றி நலமாக வாழலாம்.

Health News Tags:மூட்டு வலி மூட்டு தேய்மானம்

Post navigation

Previous Post: புதுவை மாநிலம் செக்ஸ் சுற்றுலா பகுதியாக மாறிவருகிறது
Next Post: மூட்டு வலி தைலம் எளிமையாக வீட்டிலேயே தயாரிக்கலாம்

Related Posts

Paulsons Beauty and Fashion Private Limited inaugurates the 54th outlet of ‘Toni&Guy’ Paulsons Beauty and Fashion Private Limited inaugurates the 54th outlet of ‘Toni&Guy’ Health News
இந்த உலகக்கோப்பை தொடரில் சச்சின் தெண்டுல்கர் சாதனையை யாராவது முறியடிப்பார்களா?? Health News
அஷ்ட சூரணம் அஷ்ட சூரணம் குடற்புண் குணமாக அஷ்ட சூரணம் Health News
இன்று பாகிஸ்தான் நாட்டின் மத்திய மந்திரி மாரடைப்பினால் மரணம் அடைந்தார் Health News
ராகுல் காந்தி முன்னணியில் உள்ளார் Health News
ஆந்திர கடற்பகுதியில் இலங்கை படகு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது Health News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme