Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

மூட்டு வலி தைலம் எளிமையாக வீட்டிலேயே தயாரிக்கலாம்

Posted on August 31, 2019August 31, 2019 By admin No Comments on மூட்டு வலி தைலம் எளிமையாக வீட்டிலேயே தயாரிக்கலாம்

மூட்டு வலி தைலம் எளிமையாக வீட்டிலேயே தயாரிக்கலாம்!

தேவையான பொருள்கள்:

நல்லெண்ணெய்.
வேப்பெண்ணெய்.
கடுகு எண்ணெய்.
நீரடிமுத்துக்கொட்டை எண்ணெய்.(விளக்கெண்ணெய்)
தேங்காய் எண்ணெய்.
சுக்கு.
மிளகு.
இலுப்பை கொட்டை.
அருகம்புல்.
நொச்சி இலை.
செய்முறை:

200 மி.லி நல்லெண்ணெயை ஒரு பானையில் ஊற்றி சிறிது சூடேறியதும் 200 மி.லி வேப்பெண்ணெயை ஊற்றி சிறிது சூடேற்றி பிறகு 200 மி.லி கடுகு எண்ணெயை ஊற்றி 1 நிமிடம் சூடேற்றி நீரடி 200 மி.லி முத்துக்கொட்டை எண்ணெயை ஊற்றி 2 நிமிடம் சூடேற்றி பின்பு 200 மி.லி தேங்காய் எண்ணெய் ஊற்றி 3 நிமிடங்கள் சூடேற்றி இறக்கி விடவும்.

50 கிராம் சுக்கையும், 50 கிராம் மிளகையும் நன்றாக இடித்து கொள்ளவும். 100 கிராம் இலுப்பை கொட்டையை பச்சையாக கொண்டு வந்து இடித்து கொள்ளவும்.

100 கிராம் அருகம்புல்லையும், 100 கிராம் நொச்சி இலைகளையும் பச்சையாக கொண்டு வந்து சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும். பிற‌கு அனைத்தையும் தைல பானையில் போட்டு மீண்டும் சிறு தீயில் வைத்து சூடேற்றவும்.தைல பதத்தில் வரும் போது இறக்கி வடிகட்டி தைலத்தை கண்ணாடி பாத்திரத்தில் பத்திரப்படுத்தவும்.

உபயோகிக்கும் முறை:

உடம்பில் வலியுள்ள இடத்தில் இந்த தைலத்தை பலமுறை நன்றாக தடவி அரப்பு தேய்த்து வெந்நீரில் கழுவவும். ஒரு நாளைக்கு 2 முறை பயன்படுத்தலாம்.

‪மூட்டுவலி‬ குணமாக

அரிசிமாவுடன் ஊமத்தை இலையை சமமாக எடுத்து நன்றாக மைபோல் அரைக்கவும். அரைத்த விழுதுடன் சிறிது தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய்யோ சேர்த்து களிப்பு பதத்தில் பூசி வந்தால் மூட்டுவலி, வீக்கம், வெளிமூலம், நரம்பு சிலந்தி, பால் பெருக்கால் உருவாகும் வலி, கட்டிகள் முதலியவை குணமாகும்.

‪தழுதாழை‬, வாதநாராயணன், நொச்சி, வேலிப்பருத்தி, கரியபவளம் ஆகியவற்றின் பொடியை புளியில் கரைத்து தடவ குணமாகும்.

வெந்நீரில்‬ எப்சம் உப்பைக் கலந்து ஒவ்வொரு நாளும் வலி உள்ள இடத்தில் தடவினால் வலி குறையும். கழுவிய இடத்தில் ஆலிவ் எண்ணெயைத் தடவினால் வீக்கமும் குறையும்.

Health News Tags:மூட்டு வலி தைலம் எளிமையாக வீட்டிலேயே தயாரிக்கலாம்

Post navigation

Previous Post: மூட்டு வலி மூட்டு தேய்மானம்
Next Post: Vidharth turns detective for a mystery-thriller

Related Posts

2.0 பட வில்லன் கண்ணில் மையிட்டு மிரட்டும்!! Cinema News
Hello Doctor - 2001 சிம்ஸ் மருத்துவமனையின் ‘ஹலோ டாக்டர் 2001 2001’ – திட்டம்! Health News
புதுச்சேரியில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதற்கு ஸ்டாலின் பங்கு அளப்பரியது என்று புதுச்சேரி முதல்வர் Health News
வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் Health News
முதுமையில் ஆரோக்கியமாய் வாழ இளமையில் செய்ய வேண்டியவை முதுமையில் ஆரோக்கியமாய் வாழ இளமையில் செய்ய வேண்டியவை Education News
சூலூர் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. Health News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme