நடிகர் அஜீத் நடிக்கும் தல 60 படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிக்கக் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தொடர்ந்து நடிகர் அஜீத் நடிக்கும் படத்திற்கு ’தல 60’ என்று தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ’நேர்கொண்ட பார்வை’யை இயக்கிய ஹெச்.வினோத் இயக்குகிறார். அந்தப் படத்தை தயாரித்த, போனி கபூர், ஜீ ஸ்டூடியோஸூடன் இணைந்து தயாரிக்கிறார். இதன் ஷூட்டிங் நவம்பரில் தொடங்குகிறது. பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட இருக்கிறது. அடுத்த வருடம் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்தப் படத்தில் அஜீத்துக்கு வில்லனாக பிரபல இந்தி நடிகர் அஜய் தேவ்கன் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. தயாரிப் பாளர் போனி கபூர் அவரிடம் பேசிவருவதாகவும் ஆனால் அஜய்தேவ்கன் தரப்பில் இன்னும் பதிலளிக்கவில்லை என்றும் தெரிகிறது.
கமலின் ’இந்தியன் 2’ படத்தில் வில்லனாக நடிக்க அஜய்தேவ்கனிடம் கேட்டபோது மறுத்துவிட்டார். அதே நேரம் ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் தேஜா நடிக்கும் ’ஆர்ஆர்ஆர்’ படத்தில் அவர் நடித்து வருகிறார். பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், அண்மையில் இவர் 7 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட ஆடம்பர கார் ஒன்றை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது