ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்து தற்போது தங்களது கஸ்டடியில் வைத்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் ஆங்கில பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள கார்த்தி சிதம்பரம் சிறையில் தன் தந்தை நிம்மதியாகவே இருக்கிறார்.
எனக்கு தெரிந்து அவருக்கு அங்கு குறை இருப்பதாக தெரியவில்லை. அதேசமயம் அவர் ஏன் கைது செய்யப்பட்டார் தற்போது விசாரிக்கப்படுகிறார் என்பது தான் புரியவில்லை. மத்திய அரசை தொடர்ந்து விமர்சித்து வந்தார் என்ற ஒரே காரணத்திற்காக அவரையும் எங்கள் குடும்பத்தையும் மத்திய பாஜக அரசு பழிவாங்குகிறது. கைது செய்ய சென்ற சிபிஐ அதிகாரிகள் கதவை தட்டாமல் சுவர் ஏறி குதித்து அவரை கைது செய்து பெரிய நாடகத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அவரை அவமானப்படுத்த வேண்டும் என்பது தான் அவர்களின் எண்ணம் என்று கூறிய கார்த்திக் சிதம்பரத்திடம் உங்கள் தந்தையால் பெரிய அளவில் பலன் அடைந்ததாக சிபிஐ குற்றஞ்சாட்டியிருக்கிறதே? என கேட்டதற்கு இதுவரை என் தந்தையால் ஒரு பலனையும் நான் அடைந்ததில்லை , அவர் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது பாராளுமன்றத்தை பார்க்க செல்ல இலவச பஸ் பாஸ் தருவார்கள், அந்த பலனை தவிற வேறெந்த பலனையும் நான் அடைந்ததாக தெரியவில்லை என கார்த்தி சிதம்பரம் பதில் அளித்துள்ளார்.