Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

உதயா விதார்த் நடிக்கும் அக்னி நட்சத்திரம்

Posted on August 31, 2019August 31, 2019 By admin No Comments on உதயா விதார்த் நடிக்கும் அக்னி நட்சத்திரம்

உதயா – விதார்த் நடிக்கும் ‘அக்னி நட்சத்திரம்’ கரிஷ்மடிக் கிரியேஷன்ஸ்’ மணிகண்டன் சிவதாஸ் – ஜேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிப்பு

1988ல் மணிரத்னம் இயக்கத்தில், கார்த்திக்-பிரபு நடிப்பில் வெளியாகி மிகப் பெரும் வெற்றி பெற்ற ‘அக்னி நட்சத்திரம்’ திரைப்படத்தை யாரும் மறந்திருக்க வாய்ப்பே இல்லை.

இந்த சூழலில், ஒரு வித்தியாசமான க்ரைம் திரில்லராக, உதயா – விதார்த் நடிப்பில், மீண்டும் ஒரு ‘அக்னி நட்சத்திரம்’ திரைப்படம், முற்றிலும் புதிய கதைகளத்துடன் பிரம்மாண்டமாக உருவாகிறது.

இப்படத்தை நாராயணமூர்த்தி, விஷ்ணுவர்தன், மோகன் ராஜா ஆகிய
முன்னணி இயக்குனர்களுடன் பல வெற்றிப் படங்களில் இணை- துணை இயக்குனராக பணியாற்றிய சரண் இப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார்.

மணிரத்னத்தின் திரைப்படத்திற்கும், இந்த புதிய படத்திற்கும் பெயர் ஒன்றை தவிர வேறு இந்த தொடர்பும் இல்லையென்றாலும், இப்பெயர் கிடைத்ததில் ஒட்டுமொத்த படக்குழுவுமே மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

எல் கே விஜய் ஒளிப்பதிவில், சில்வா மாஸ்டர் சண்டை காட்சி அமைப்பில், ஒய் ஆர் பிரசாத் இசைக்கு, பா விஜய் பாடல்கள் எழுத, சான் லோகேஷ் படத்தொகுப்பை கவனித்து கொள்கிறார்.

வரும் செப்டம்பர் மாதத்தில், படப்பிடிப்பு துவங்க இருக்கும் நிலையில், இப்படத்திற்கான நடிக-நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. இப்படம் சென்னை, ஏலகிரி, வேலூர் மற்றும் கோவையில் படமாக்கப்பட இருக்கிறது.

Cinema News Tags:உதயா விதார்த் நடிக்கும் அக்னி நட்சத்திரம்

Post navigation

Previous Post: நடிகை டாப்ஸீ பண்ணு ஓட்டப்பந்தய வீராங்கனையாக
Next Post: கார்த்திக் சிதம்பரம் கிண்டல் அப்பாவால் இலவச பாஸ் தான் மிச்சம்

Related Posts

பிரபல நடிகைக்கு விட்டுக்கொடுத்த பிரபாஸ் பிரபல நடிகைக்கு விட்டுக்கொடுத்த பிரபாஸ் Cinema News
திரையரங்கில் வெளியானால் தான் திரைப்படங்களுக்கு மரியாதை - ‘உதிர்’ இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு திரையரங்கில் வெளியானால் தான் திரைப்படங்களுக்கு மரியாதை – ‘உதிர்’ இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு Cinema News
Thalapathy Vijay’s Film "LEO" Sets Pre-Release Record in the UK through Ahimsa Entertainment இங்கிலாந்தில் தளபதி விஜய்யின் “லியோ” திரைப்படம் அஹிம்சா என்டர்டெயின்மென்ட் மூலம் வெளியீட்டிற்கு முன்னரே மிகப்பெரும் சாதனை படைத்துள்ளது. Cinema News
TM சௌந்தரராஜனுக்கு AR Theatre Club இசை அஞ்சலி Cinema News
Filmmaker ARK Saravan Filmmaker ARK Saravan has his hands full of promising projects for 2023-24 Cinema News
முதல் முறையாக பான் இந்தியா இசையில் தடம் பதிக்கும் டி ஆர் Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme