அமேசான் காடு என்று விளம்பரத்தில் மட்டும் பார்த்திருப்போம் ஆனால் தற்போது காட்டுத்தீ பரவி உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களாக அமேசான் காடு எரிந்து கொண்டிருக்கிறது. அதில் வாழும் உயிரினங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன, இதை பார்ப்பதற்கு நெஞ்சை பதற வைக்கிறது, உலகின் 20% ஆக்ஸிஜன், மில்லியன் கணக்கான உயிரினங்களை, தாவரங்களை இந்த உலகத்திற்கு தந்துள்ளது.
ஆனால் தற்போது இரண்டு,மூன்று வாரங்களாக எரிந்து கொண்டிருப்பதை பார்த்து உலகநாடுகள் பெரும் கவலையில் உள்ளது. பூமி இறந்து கொண்டிருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த பேரழிவினால் காட்டில் வாழும் உயிரினங்கள் எரிந்த நிலையில் உள்ள புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களை மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் உலகமக்கள் மீண்டும் இயற்கை வளங்கள் திரும்ப பெற வேண்டும் என்று வேண்டி வருகின்றனர்.