விஸ்வாசம்’ படத்தின் பாடலுக்கு அமைச்சர் பாராட்டு
கடந்த பொங்கலுக்கு அஜித் நடிப்பில் வெளியான படம் ‘விஸ்வாசம்’. இந்த படம் அனைத்து தரப்பினரிடமும் இருந்து நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேசுகையில், ‘விஸ்வாசம்’ படத்தில் இடம்பெற்ற “கண்ணான கண்ணே” பாடலில் , பாடலாசிரியர் தாமரை வழக்கொழிந்த தமிழ் சொற்களை மீட்டெடுத்து பயன்படுத்தி இருப்பது பாராட்டுக்குரியது என்றும், பழைய தமிழ் சொற்களையும் மீட்டு எடுத்து உள்ளதற்கு பாராட்டும் தெரிவித்துள்ளார்..