மயூரன் திரை விமர்சனம்
இயக்குநர் பாலாவின் பட்டறையைச் சேர்ந்தவர் நந்தன் சுப்பராயன். இவரது இயக்கத்தில் வந்துள்ள படம் மயூரன்.ஒரு கல்லூரியில் இணையும் மூவர் நண்பர்களாகிறார்கள். ஜான் என்கிற ஜானகிராமன். எதற்காகவும் துணிந்து போராடும் சேகுவரா. இவர்களுடன் விஜய் டிவி புகழ் அமுதவாணன்.
ஒரு நாள் ஜானகிராமன் ஆஸ்பத்திரிக்கு செல்கிறார். அப்போது கேன்சர் நோயாளியின் மெடிக்கல் ரிப்போர்ட் இவருக்கு வந்துவிடுகிறது.இதனால் இவருக்கு நோய் என நினைக்கிறார். மேலும் ஒரு பெரிய தொகைக்கு ஆசைப்பட்டு போதை பொருளை விற்க முற்படுகிறார்.
தன் நெருங்கிய நண்பர்களிடம் கூட சொல்லாமல் போதை பொருளை எடுத்துக் கொண்டு புறப்படுகிறார்.
அதன்பின்னர் இவர் எங்கு சென்றார்? என யாருக்கும் தெரியவில்லை. எங்கே சென்றார்? என்ன ஆனார்? நண்பர்கள் என்ன செய்தார்கள்? என்பதே மீதிக்கதை.
பாலாவின் சீடர் என்று படத்திற்கு சென்றால் நம்மை ஏமாற்றியிருக்கிறார் நந்தன்.
ஏழை குடும்பம், படிப்பு, போதை கும்பலிடம் சிக்கிக் கொள்ளும் மாணவர்கள், நண்பனுக்காக போராடும் காட்சி என அருமையாக கதைக்களத்தை கொண்டு செல்ல முடியாமல் தடுமாறியிருக்கிறார் டைரக்டர்.
ஒளிப்பதிவு – பரமேஷ்வர் (இவர் சந்தோஷ்சிவனிடம் உதவியாளராக பணியாற்றியவர்)
இசை – ஜுபின் (பழையவண்ணாரப்பேட்டை) மற்றும் ஜெரார்ட் இருவரும்.
பாடல்கள் – குகை மா.புகழேந்தி
எடிட்டிங் – அஸ்வின்
கலை – M. பிரகாஷ்
ஸ்டன்ட் – டான் அசோக்
நடனம் – ஜாய்மதி
மக்கள் தொடர்பு – மணவை புவன்
தயாரிப்பு – K.அசோக்குமார், P.ராமன், G.சந்திரசேகரன், M.P. கார்த்திக்