வைல்காட் மூலமாக 17-வது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த நடிகை கஸ்தூரியும் இரண்டு வாரங்களிலேயே வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் இந்த வாரம் “நோ எவிக்ஷன்” என்று பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல் ஹாசன் கடந்த வாரமே பார்வையாளர்களுக்கு தெரிவித்திருந்தார்.
இது பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு தெரியாத காரணத்தால் இந்த வாரம் எவிக்ஷனுக்காக நாமினேட் செய்யப்பட்ட அனைவரும் வீட்டில் தங்களின் பங்களிப்பை அதிகமாக செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் 67-வது நாளிற்கான முதல் புரோமோ வீடியோவை பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதில், இந்த வாரம் நடைபெற்று வரும் கிராமத்து டாஸ்க்கில் வில்லுப்பாட்டு ஒன்றை சாண்டி பாடி கவினின் காதலை கலாய்க்கின்றார்.
சாண்டியின் பாடலுக்கு ஆமாம், ஆமாம் என்று கோரஸ் போடுகின்றனர் முகின், வனிதா, லாஸ்லியா குழுவினர். கவின் காதல் குறித்து சாண்டி பாடும் ஒவ்வொரு வரியின்போதும் கவின் வெட்கத்தால் சிரிக்கின்றார்.
இந்த வார டாஸ்கில் தான் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் சண்டை போடாமல் இருப்பதால் அவர்களை கலாய்க்கும் விதமாக எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என்று நெட்டிசன்கள் கமெண்டுகளை வெளியிடுகின்றனர்.