க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஜுனியர் பாலையா, ஜெயபிரகாஷ், அருள்தாஸ், ஜி.எம்.சுந்தர், காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் டீசர் கடந்த மே மாதத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து செப்டம்பர் 6-ம் தேதி படம் திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வரும் படக்குழு படத்தின் ஸ்னீக் பீக் காட்சியை நேற்று வெளியிட்டனர். அக்காட்சியைப் பார்த்த இயக்குநர் கே.வி.ஆனந்த், “ஆர்யாவின் கை, கால் முதுகு எல்லாம் நடிக்குது. படக்குழுவுக்கும், ஆர்யாவுக்கும் பாராட்டுகள்” என்று கூறியுள்ளார்.