சென்னையில் இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டி; நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதில் எனக்கு சம்மதமில்லை. ஆனால் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்கிறேன். ரஜினிக்கு அடுத்து விஜய்தான் சூப்பர் ஸ்டார். இதற்கு அடுத்த சூப்பர் ஸ்டார் நடிகர் சிம்பு. அவர் ஆடல், பாடல், நடிப்பு, இசை எனப் பல திறமைகள் கொண்டவர். ஆனால் சிம்புவிடம் உள்ள ஒரேகுறை அவர் நேரம் தவறுவதுதான். இதை சரிசெய்யும்படி அவரிடம் கூறியுள்ளேன்.
தமிழக முதல்வரின் ஆடை குறித்து விமர்சிப்பவர்கள் மனநோயாளிகள். வேலை எதுவும் இல்லாதவர்களே ஆடை குறித்து விமர்சிப்பார்கள். இந்த மண்ணின் முதலமைச்சரை விட்டுக் கொடுக்க முடியாது. இவ்வாறு சீமான் பேட்டியளித்தார்.