திருநங்கையாக மாறிய அங்காடித்தெரு மகேஷ்.! வைரலாகும் புகைப்படம்
அங்காடித்தெரு படத்தில் நடித்த மகேஷ், அஞ்சலி தங்களது உண்மையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள். தற்போது மகேஷ் ‘தேனாம்பேட்டை’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் எம்.எஸ்.பாஸ்கர், இமான் அண்ணாச்சி மற்றும் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தில் மகேஷ் வாட்டர் சப்ளை செய்யும் தொழிலை செய்து வருகிறார், அதுமட்டுமல்லாமல் திருநங்கையாக நடித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது. விஜய்சேதுபதி திருநங்கையாக நடித்து வெளிவந்த சூப்பர் டீலக்ஸ் படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதேபோல் இந்த படமும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.