ரஜினிகாந்தின் அண்ணனான சத்தியநாராயணன் மூட்டுவலி பிரச்னை காரணமாக பெங்களூருல் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்தியநாராயணா பெங்களூருவில் வசித்து வருகிறார். சத்தியநாராயணாவுக்கு சில நாட்களாக மூட்டு வலி மூட்டுவலி பிரச்னை இருந்து வந்துள்ளது. வலி தீவிரமடைந்ததை அடுத்து அவர் பெங்களூரு பன்னரகட்டா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்தனர். தற்போது அவர் நலமாக இருக்கிறார். அண்ணன் சத்தியநாராயணாவை பார்க்க நேற்று நடிகர் ரஜினிகாந்த் பெங்களூரு சென்றிருக்கிறார். பன்னரகட்டா ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்ற அவர் தனது அண்ணன் சத்தியநாராயணாவை பார்த்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.
முன்னதாக, மருத்துவமனைக்கு ரஜினிகாந்த் வருவதை அறிந்த ஊழியர்கள், பொதுமக்கள், ரசிகர்கள் என்று அனைவரும் அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுக்க முயன்றனர். பலர் தங்களின் செல்போனில் வீடியோ பதிவு செய்தனர். இதனால் அவர்களுக்குள் லேசான தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இதன் காரணமாக மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.