பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதை ஐஸ்வர்யாராய் உறுதிப்படுத்தி உள்ளார். இந்த படத்தில் நடிப்பது பெருமையாக உள்ளது என்று அவர் கூறினார். தற்போது பிரபல மலையாள நடிகர் ஜெயராமும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வாகி இருக்கிறார். இந்த படத்தில் நடிப்பதை ஜெயராம் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் உறுதிப்படுத்தி உள்ளார். என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை. பொன்னியின் செல்வனில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பட்டியலை விரைவில் அதிகாரபூர்வமாக வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் இந்த படம் தயாராகிறது. ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக எடுக்கின்றனர். பாகுபலியை மிஞ்சும் கிராபிக்ஸ் காட்சிகளை புகுத்தவும் திட்டமிட்டு உள்ளனர்.